100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: ‘நாச்சியார்’ பட அப்டேட்

நாச்சியார்’ படத்தை 100 நிமிடங்கள் கொண்ட
திரைக்கதையாகவும், ஒரே ஒரு பாடலுடனும்
உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பாலா.

பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நாச்சியார்’ திரைப்படம்,
பிப்ரவரி 16-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. பி ஸ்டூடியோஸ்
மற்றும் ஈயான் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும்
இப்படத்தை காளிதாஸ் வெளியிடவுள்ளார்.

ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும்
இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
முதன் முறையாக 100 நிமிடங்களே ஓடக்கூடிய கதையாக
‘நாச்சியார்’ படத்தை உருவாக்கியுள்ளார் பாலா.

மேலும், இளையராஜா இசையில் ஒரே ஒரு பாடல் மட்டுமே
படத்தில் இடம்பெற்றுள்ளது. எப்போதுமே 2.30 மணி
நேரத்திற்கு மேலாகவும், பாடல்களிலும் கவனம் செலுத்தும்
பாலா, இம்முறை முழுக்க வேகமாக செல்லும் திரைக்
கதையாக அமைத்து இயக்கியுள்ளார் என்று கூறுகிறது
படக்குழு.

‘நாச்சியார்’ பணிகள் முழுமையாக முடிந்துவிட்டதால்,
தற்போது விக்ரமின் மகன் துருவ் நடிக்கவுள்ள ‘வர்மா’
படத்தின் முதல்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்
பாலா.

இப்படத்தின் வசனங்களை எழுதி வருகிறார்
இயக்குநர் ராஜுமுருகன். இதன் படப்பிடிப்பு விரைவில்
தொடங்கவுள்ளது.

—————————————–
தி இந்து

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: