சீரகத்தின் மருத்துவ குணங்கள்!

சீரகத்தை வாயில் போட்டு, குளிர்ந்த தண்ணீரை குடித்தால்,
தலைச் சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.

* திராட்சை ஜூஸுடன், சீரகம் கலந்து பருகி வர,
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

* அகத்திக்கீரையுடன், சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து
கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால், மன நோய் குணமாகும்.

* சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்து, கொட்டைப்பாக்கு
அளவு சாப்பிட்டு வந்தால், நெஞ்சு எரிச்சல் குணமாகும்.

* சீரகத்துடன் எலுமிச்சை சாறு கலந்து உலர்த்தி, துாளாக
இடித்து, ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இதை, தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு, மோர் குடித்து
வந்தால், மார்பு வலி நீங்கும்.

* மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்து பருகினால்,
வாயுத் தொல்லை நீங்கும்.

* சீரகத்தை இஞ்சி மற்றும் எலுமிச்சம் பழ சாற்றில் கலந்து,
ஒருநாள் ஊற வைத்துக் கொள்ளவும். இதை, தினம்
இருவேளை வீதம், மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம்
குறையும்.

* சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றை பொடித்து,
தேனில் கலந்து சாப்பிட்டால், எல்லா உடல் உள்
உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்யும். உடலுக்கு
குளிர்ச்சியும், தேகத்தை பளபளப்பாக வைக்கும் ஆற்றலும்
சீரகத்திற்கு உண்டு.

* சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு மிளகு
சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால்,
வயிற்றுப் பொருமல் போய்விடும்.

* சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை
சாறுடன் சேர்த்து பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன், கருப்பட்டி சேர்த்து
சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெற்று, நரம்புத் தளர்ச்சி
குணமாகும்.

*சீரகத்தை துாள் செய்து, தேனுடன் கலந்து லேகியமாக தர,
ஒல்லியாக இருப்பவர்கள், குண்டாவர்.

—————————————
-வாரமலர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: