சிதம்பரம் நடராஜர்கோவில் பற்றிய தகவல்கள் – பகுதி 3

Related image
36. நடராஜருக்கு பொன்னம்பலம் என்ற பெயர் எப்படி
வந்தது தெரியுமா? பொன்+அம்பலம்= பொன்னம்பலம்.
அம்பலம் என்றால் சபை. பொன்னாலாகிய சபையில்
நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடுவதால் அவருக்கு
பொன்னம்பலம் என்ற பெயர் ஏற்பட்டது.
🌹💫

37. உலகில் உள்ள எல்லா சிவகலைகளும் அர்த்த
ஜாமத்தில் இத்தலத்துக்கு வந்து விடுவதாக ஐதீகம்.
எனவே இத்தலத்தில் மட்டும் அர்த்தஜாம பூஜை
தாமதமாக நடத்தப்படுகிறது.
☘💫

38. சிதம்பரம் நடராஜருக்கு தினமும் 6 கால பூஜை நடத்தப்
படுகிறது.
🌹💫

39. நடராஜரின் ஆனந்தத் தாண்டவத்தில்தான்
இப்பிரபஞ்சத்தின் இயக்கமே அமைந்துள்ளது. அண்ட
சராசரங்களும் நடராஜரின் தாண்டவத்தால் இன்பம்
அடைகிறதாம்.
☘💫

40. மனித உடலில் இருதய பகுதி உடலின் இரு பக்க
பகுதிகளை இணைப்பது போல இதயப் பகுதியாக சிதம்பரம்
கோவில் உள்ளது. நடராஜ பெருமானுக்குரிய விமானம் கூட
இதய வடிவில்தான் அமைந்துள்ளது.
🌹💫

41. சிதம்பர நடராஜரின் வடிவம் சிவசக்தி ஐக்கியமான
உருவமாகும். அதாவது அர்த்த நாரீஸ்வரத்தன்மை
உடைபவர் வலப்பக்கத்தில் சிவனும், இடது பக்கத்தில் ச
க்தியும் உறைந்துள்ளனர்.

எனவே அன்னை சிவகாமி இல்லாமலும் நாம் நடராஜ
பெருமானை தரிசனம் செய்யலாம்.
🌹💫

42. சிதம்பர ரகசியம் என்று கூறப்படும் பகுதியில்
வில்வத்தளம் தொங்கும் காட்சியைப் பார்த்தால் முக்தி
கிடைக்கும். இதைத்தான் ‘பார்க்க முக்தி தரும் தில்லை’
என்கிறார்கள்.
☘💫

43. சிவபெருமானுக்கும், காளிக்கும் நடந்த நடனப்போட்டி
திருவாலங்காட்டில் நடந்ததாகவும், ஆனால் தில்லைக்கு
சிறப்பு ஏற்படுத்த அந்த வரலாற்றை சிதம்பரத்துக்கு
மாற்றி விட்டார்கள் என்றும் மூதறிஞர்
அ.ச.ஞானசம்பந்தனார் குறிப்பிட்டுள்ளார்.
🌿💫

44. சிதம்பரத்தில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய
மும்மூர்த்திகளும் திருக்கோவில் கொண்டுள்ளனர்.
☘💫

45. இத்தலத்தில் மட்டுமே ஒரே இடத்தில் நின்றபடி சிவன்,
விஷ்ணு, பிரம்மன் ஆகிய மூவரையும் தரிசனம் செய்ய
முடியும்.
☘💫

46. ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவில் இந்த ஆலயம்
உள்ளது.
🌹💫

47. இத்தலத்தில் பொன்னம்பலம் எனப்படும் சிற்றம்பலம்
மற்றும் திருமூலட்டானர் கோவில் ஆகிய 2 இடங்களில்
இறைவனும், இறைவியும் எழுந்தருளி உள்ளனர்.
🌿💫

48. சிதம்பரத்தில் அதிகாலை தரிசனமே மிக, மிக சிறப்பு
வாய்ந்தது.
☘💫

49. சிதம்பரம் ஆலயத்துக்குள் நுழைந்ததும் எந்த
பிரகாரத்துக்கு எப்படி செல்வது! எந்த மூர்த்தியை வழி
படுவது? என்பன போன்ற குழப்பம் ஏற்பட்டு விடும்.
அந்த அளவுக்கு இது பெரிய ஆலயம்.
🌹💫

50. மனிதரின் உடம்பும் கோவில் என்பதனை விளக்கும்
வகையில் சிதம்பரம்நடராசர் கோவில் அமைந்துள்ளது.
மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம்,
விஞ்ஞான மயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து
சுற்றுக்களைக் கொண்டது. அதற்கு ஈடாக சிதம்பரம்
நடராஜர் கோவிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.

———————————
நன்றி- இணையம்
🌿💫

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: