சிதம்பரம் நடராஜர்கோவில் பற்றிய தகவல்கள் – பகுதி 2 –

Image result for சிதம்பரம்  கோயில்

21. முத்து தாண்டவர் என்ற புலவர் தினமும் சிதம்பரம்
கோவிலுக்குள் நுழைந்ததும், முதலில் தன் காதில் எந்த
சொல் விழுகிறதோ, அதை வைத்து கீர்த்தனை இயற்றி,
பாடி நடராஜரை துதித்து வழிப்பட்டார்.

அவர் பாடி முடித்ததும் தினமும் அவருக்கு நடராஜர்
படிக்காசு கொடுத்தது ஆச்சரியமானது.
🌹🌿

22. சங்க இலக்கியமான கலித் தொகையின் முதல் பாடல்
சிதம்பரம் நடராஜர் துதியாக உள்ளது. எனவே சங்க
காலத்துக்கு முன்பே சிதம்பரம் தலம் புகழ் பெற்றிருந்தது
உறுதியாகிறது.
🌿💫

23. சிதம்பரம் நடராஜருக்கு சிதம்பரத்தின் பல பகுதிகளிலும்
தீர்த்தங்கள் உள்ளன.
🌿🌿

24. ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒரு தல புராணத்தை சிறப்பாக
சொல்வார்கள். சிதம்பரம் ஆலயத்துக்கு புலியூர் புராணம்,
கோவில் புராணம், சிதம்பரப் புராணம் என்று மூன்று
தல புராணங்கள் உள்ளன.
☘☘

25. சங்க கால தமிழர்கள் கட்டிய சிதம்பரம் ஆலயம்
இப்போது இல்லை. தற்போதுள்ள ஆலயம் பல்லவ மன்னர்களால்
கட்டப்பட்டு, சோழ மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டது
ஆகும்.

26. சங்க காலத்துக்கு முன்பு சிதம்பரம் ஆலயம் கடலோரத்தில்
இருந்ததாக பாடல்கள் குறிப்பின் மூலம் தெரிகிறது.
🌹💫

27. சிதம்பரம் தலம் உருவான போது பொன்னம்பலம் எனும்
கருவறை தென் திசை நோக்கி இருந்ததாம். பல்லவ மன்னர்கள்
புதிய கோவில் கட்டிய போது அதை வடதிசை நோக்கி அமைத்து
விட்டதாக சொல்கிறார்கள்.
☘💫

28. முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் படையெடுப்பின் போது
சிதம்பரம் தலம் பல தடவை இடித்து நொறுக்கப்பட்டது.
என்றாலும் பழமை சிறப்பு மாறாமல் சிதம்பரம் தலம் மீண்டும்
எழுந்தது.
☘💫

29. இத்தலத்துக்கு ‘தில்லை வனம்’ என்றும் ஒரு பெயர் உண்டு.
புலியூர், பூலோக கைலாசம், புண்டரீகபுரம், வியாக்கிரபுரம்
முதலிய வேறு பெயர்களும் உண்டு.
🌹🌹

30. மாணிக்கவாசகர் இத்தலத்தில் தங்கி இருந்த போது,
கண்டப்பத்து, குயில்பத்து, குலாபத்து, கோத்தும்பி,
திருப்பூவல்லி, திருத்தோணோக்கம், திருத்தெற்றோணம்,
திருப்பொற்சுண்ணம், திருப்பொன்னூசல், திருவுந்தியார்,
அண்ணப்பத்து, கோவில் பதிகம், கோவில் மூத்த திருப்பதிகம்,
ண்ணப்பதிகம், ஆனந்த மாலை, திருப்படையெழுச்சி,
யாத்திரைப்பத்து நூல்களை பாடினார்.
🌹💫

31. சிவகங்கை தீர்த்த குளம் நான்கு புறமும் நல்ல
படிக்கட்டுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இது போன்று
தமிழகத்தில் வேறு எந்த தலத்திலும் இல்லை.
☘💫

32. சிவகங்கை தீர்த்த குளம் அருகில் சிறு தூனை
நட்டியுள்ளனர். அங்கியிருந்து பார்த்தால் 4 ராஜ
கோபுரங்களையும், ஒரு சேர தரிசனம் செய்ய முடியும்.
☘💫

33. இத்தலத்து பெருமானுக்கு சபாநாயகர், கூத்த பெருமான்,
நடராஜர், விடங்கர், மேருவிடங்கர், தெட்சிணமேருவிடங்கர்,
பொன்னம்பலம், திருச் சிற்றம்பலம் என்றெல்லாம் சிறப்புப்
பெயர்கள் உண்டு.
🌿💫

34. சிதம்பரத்தில் நடராஜர் ஆனந்த நடனம் ஆடிய இடத்தை
சிற்றம்பலம் என்பார்கள். இதை சிற்சபை, சித்சபை என்றும்
அழைப்பதுண்டு.
🌿💫

35. திருவாதிரையன்று தாமரை, செண்பகம், அத்தி போன்ற
மலர்களை பயன்படுத்தி பூஜை செய்தால் நடராஜரின்
முழுமையான அருளைப் பெறலாம்.
☘💫

—————————
நன்றி- இணையம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: