சிதம்பரம் நடராஜர்கோவில் பற்றிய தகவல்கள் – பகுதி 1

Image result for சிதம்பரம்  கோயில்

1. பஞ்ச பூதங்களால்தான் இந்த பிரபஞ்சமே இயங்குகிறது.
பஞ்ச பூதங்களில் ஆகாயம் முதலில் தோன்றியது.
அந்த வகையில் பஞ்சபூதத் தலங்களில் முதல் தலமாக
சிதம்பரம் உள்ளது.
☘💫☘

2. பஞ்சபூத தலங்கள் மற்றும் பாடல் பெற்ற தலங்களை
வழிபட விரும்புபவர்கள் சிதம்பரத்தில் இருந்து
தொடங்குவது நல்லது என்பது ஐதீகமாக உள்ளது.

3. வைணவத்தில் கோவில் என்றால் ஸ்ரீரங்கத்தை குறிப்பது
போல சைவத்தில் கோவில் என்றால் சிதம்பரம் நடராஜரையே
குறிக்கும்.
🌹☘

4. சிதம்பரம் நடராஜர் ஆலயம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில்
பிரமாண்டமாக அமைந்துள்ளது.
☘💫

5. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய 3 பெருமைகளையும்
சிதம்பரம் கொண்டுள்ளது.
☘🌹

6. சிதம்பரம் நடராஜரை எல்லா கடவுள்களும் வந்து வழிபட்டு
பேறு பெற்றனர். இதை உணர்த்தும் வகையில் நடராஜர்
ஆலயம் முழுவதும் ஏராளமான சன்னதிகள் உள்ளன.
🌿🎋💫

7. நடராஜர் ஆலயத்துக்குள் தினமும் 27 லிங்கங்களுக்கு
அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இது தவிர
ஏராளமான லிங்கங்கள் உள்ளன.
🌹🌹

8. சிவாலயங்களில் கர்ப்பக்கிரக கோஷ்டத்தை சுற்றி தெய்வ
உருவங்கள் இருக்கும். சிதம்பரத்தில் அத்தகைய அமைப்பு
இல்லை.
☘💫

9. திருவண்ணாமலை போன்றே எமன், சித்ரகுப்தன் இருவரும்
சிதம்பரம் தலத்திலும் வழிபட்டுள்ளனர். இதை உறுதிப்
படுத்தும் வகையில் பிரகாரத்தில் எமனுக்கும், சிவகாமி
அம்மன் சன்னதி பகுதியில் சித்ரகுப்தனுக்கும் சிலை உள்ளது.
🌹🌹

10. இங்குள்ள 4 கோபுரங்களும் சிறப்பு களஞ்சியங்களாக
உள்ளன. கிழக்கு கோபுரம் ஆடல் கலையின் அனைத்து
அம்சங்களையும் கொண்டுள்ளது. மற்றொரு கோபுரத்தில்
இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி, பராசக்தி, விநாயகர்,
முருகன், விஷ்ணு, தன்வந்திரி, இந்திரன், அக்னி, வாயு,
குபேரன், புதன், நிருதி, காமன், பத்ரகாளி, துர்க்கை,
கங்காதேவி, யமனாதேவி, ராகு, கேது, நாரதர், விசுவகர்மா,
நாகதேவன், சுக்கிரன், லட்சுமி, வியாக்ரபாதர், அகத்தியர்,
திருமூலர், பதஞ்சலி ஆகியோர் சிலைகள் உள்ளன.
☘💫
———————————–

11. புத்த மதத்தை தழுவிய மன்னன் அசோகன்,
தன் படை ஒன்றை அனுப்பி, சிதம்பரம் கோவிலை
புத்த விகாரமாக மாற்ற முயன்றான்.

அவர்களை மாணிக்கவாசகர் தன் திறமையால்
ஊமையாக்கி சிதம்பரத்தை காப்பாற்றினார்.
🌹🌿

12. தமிழ்நாட்டில் எந்த ஒரு சிவாலயத்திலும் பார்க்க
முடியாதபடி சிதம்பரம் ஆலயத்தில் மட்டுமே அரிய
வகை வித்தியாசமான சிவ வடிவங்களைப் பார்க்க
முடியும்.
🌿🌹

13. தமிழ் மொழியை மட்டுமின்றி தமிழர் பண்பாட்டு
கலாச்சாரத்தை பாதுகாத்த சிறப்பும் சிதம்பரம்
ஆலயத்துக்கு உண்டு.
☘☘

14. அறுபத்து மூவர் வரலாறு மட்டும் சிதம்பரம் கோவிலில்
பாதுகாப்புடன் வைக்கப்படாமல் இருந்திருந்தால்
63 நாயன்மார்கள் பற்றி குறிப்புகள் நமக்கு தெரியாமல்
போய் இருக்கும். அந்த சிவனடியார்களை நாம் தெரிந்து
கொள்ளாமலே போய் இருப்போம்.
🌿💫

15. சிதம்பரம் கோவிலுக்குள் திருமுறைகள் உள்ளது
என்பதை இந்த உலகுக்கு சொன்னவர் பொல்லாப்
பிள்ளையார் ஆவார். எனவே விநாயகரை ‘மூத்த நாயனார்’
என்கிறார்கள்.
🌹💫

16. சிதம்பரம் தலத்தை நால்வரும் புகழ்ந்து பாடியுள்ளனர்.
எனவே திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்,
மாணிக்கவாசகர் ஆகிய நால்வரின் குரு பூஜை பெரிய
திருவிழா போல இத்தலத்தில் கொண்டாடப்படுகிறது.
☘🌹

17. மாணிக்கவாசகர் மட்டுமின்றி நந்தனார், கணம்புல்லர்,
திருநீலச் கண்டக் குயவர் ஆகியோரும் தில்லையில் முக்தி
பெற்றனர்.
🌿🌿

18. சிதம்பரத்தில் நடக்கும் திருவிழாக்களில் திருவாதிரை
திருவிழாவும் முக்கியமானது. அன்று ஒரு வாயாவது
திருவாதிரைக்களி சாப்பிட வேண்டும் என்பார்கள்.
☘☘

19. ஒரு தடவை இத்தலத்தில் கொடியேற்றம் நடந்த போது
கொடி ஏறாமல் தடைபட்டது. அப்போது உமாபதி
சிவாச்சாரியார் என்பவர் கொடிக்கவி என்ற பாடலை
பாடினார். அடுத்த நிமிடம் கொடி மரத்தில் தானாகவே
ஏறிய அற்புதம் நடந்தது.
🌹🌹

20. தேவநாயனார் என்பவர் நடராஜர் மீது ஒரு சித்தாந்த
பாடலை பாடி கருவறை முன்புள்ள வெள்ளிப்படிகளில்
நூலை வைத்தார். அப்போது படியில் உள்ள ஒரு யானை
சிற்பம் உயிர் பெற்று அந்த நூலை எடுத்து நடராஜரின்
காலடியில் எடுத்து வைத்தது.

இந்த அதிசயம் காரணமாக அந்த நூலுக்கு
திருக்களிற்றுப்படியார் என்ற பெயர் ஏற்பட்டது.

———————————-
நன்றி – இணையம்
☘💫

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: