வெற்றி மொழி: மார்கஸ் கார்வே

 

1887 ஆம் ஆண்டு முதல் 1940 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த
மார்கஸ் கார்வே ஜமைக்காவை சேர்ந்த கருப்பு தேசியவாத
இயக்க ஆர்வலர், தொழிலதிபர், மிகச்சிறந்த
சொற்பொழிவாளர் மற்றும் எழுத்தாளர். மேலும், இருபதாம்
நூற்றாண்டின் மிகவும் செல்வாக்கு வாய்ந்த கருப்பின
தேசியவாத தலைவர்களில் ஒருவர்.

ஆப்பிரிக்க அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய கருப்பின
மதச்சார்பற்ற அமைப்பான யுனிவர்சல் நீக்ரோ மேம்பாட்டு
ஆணையத்தின் நிறுவனர். ஒற்றுமை, தன்னிறைவு மற்றும்
அதிகாரமளித்தல் ஆகியவற்றை இலக்காகக்கொண்டு
செயல்பட்டார்.

இவரை கௌரவிக்கும் விதமாக ஆப்பிரிக்கா, ஐரோப்பா,
கரிபியன் மற்றும் அமெரிக்காவில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள்,
நெடுஞ்சாலைகள் மற்றும் கட்டிடங்களுக்கு இவரது பெயர்
சூட்டப்பட்டுள்ளது.

# தங்களது கடந்தகால வரலாறு, தோற்றம் மற்றும் கலாசாரம்
ஆகியவற்றைப்பற்றிய அறிவில்லாதவர்கள், வேர்கள்
இல்லாத மரத்தைப் போன்றவர்கள்.

# உங்களிடம் சுயநம்பிக்கை இல்லையென்றால், வாழ்க்கை
ஓட்டத்தில் நீங்கள் இருமுறை தோல்வியடைந்தவர்களாகிறீர்கள்.

# நம்பிக்கையுடன் இருக்கும்போது, தொடங்குவதற்கு முன்னரே
நீங்கள் வெற்றிபெறுகிறீர்கள்.

# மன அடிமைத்தனத்திலிருந்து உங்களை விடுவித்துக்
கொள்ளுங்கள்.

# ஊக்கமுடன் இருப்பவர்கள், தாங்கள் சந்திக்கும்
விளைவுகளைக் கண்டு பயப்படுவதில்லை.

# முன்னேற்றமே மனிதகுலத்தை இயக்குகின்ற ஈர்ப்பு ச
க்தியாகும்.

# வெற்றியைப் போன்றதொரு வலிமை வேறு எதுவுமில்லை.

# நேர்மையான மற்றும் நியாயமான செயல்பாட்டையே
நான் விரும்புகிறேன்.

# அறிவாற்றல் உலகத்தை ஆளுகிறது, அறியாமை சுமையை
சுமக்கிறது.

# பேனா ஒரு நீண்ட வாளைவிட வலிமையானது,
ஆனால் நாக்கு அவ்விரண்டையும் விட வலிமையானது.

# நீங்கள் எதையாவது கற்றுக்கொள்ளக்கூடிய நபர்களுடன்
தொடர்புகொள்ள எப்போதும் முயற்சி செய்யுங்கள்.

# ஒவ்வொரு மனிதனுக்கும் தனது சொந்த கருத்திற்கான
உரிமை உண்டு.

# தனது மனதை மேம்படுத்தி பயன்படுத்த முடியாத ஒருவன்,
அதை பயன்படுத்துகின்ற மற்றொருவரின் அடிமைத்
தனத்திற்கு கட்டுப்பட்டவனாக இருக்கிறான்.

———————————-
நன்றி- தி இந்து

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: