எளிய மருத்துவ குறிப்புகள்

காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு
‘கிட்னியில் கல்’ என்ற பயமே தேவையில்லை.

பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில்
வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு
உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு
உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல்
சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.

பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி,
சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை
எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு
நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த
நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.

சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு
மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.

இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட
வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய்
கொப்பளிக்க வேண்டும்.

அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண்
பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்று
மூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்
படுத்துவதே நல்லது.

சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல்
வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது.
மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி…
இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.

தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன்
பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே,
முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது
அவசியமானது.

முகப்பரு இருந்தால்… உடனே கிள்ளி எறிய விரல்கள்
படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது.
முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.

————————————-
படித்ததில் பிடித்தது

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: