துணை கலெக்டரானார் சிந்து

 பாட்மின்டன் வீராங்கனை சிந்து .துணை கலெக்டர்  பணி நியமன ஆணை:.

அமராவதி:
பாட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்துவை துணை கலெக்டராக
நியமித்து பணி நியமன ஆணையை வழங்கினார் ஆந்திர முதல்வர்
சந்திரபாபு நாயுடு.

ஆந்திரா மாநிலம் ஐதரபாத்தை சேர்ந்த பாட்மின்டன் வீராங்கனை
பி.வி. சிந்து, 2016- ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியில்
ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மெரினுடன் நடந்த பைனலில்
இரண்டாமிடம் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார்.

அவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் ஆந்திர முதல்வர்
சந்திரபாபு நாயுடு துணை கலெக்டராக நியமித்து அதற்கான
பணி நியமன ஆணையை வழங்கினார்.

அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் நடந்த விழாவில்
இதற்கான ஆணையை சிந்துவிடம் பெற்றோர் முன்னிலையில்
வழங்கினார்.

சிந்து பணி நியமனம் குறித்து ஆந்திர அரசு வட்டாரங்கள்
தெரிவிக்கையில், ஆந்திரா அரசு பணியாளர் தேர்வாணையத்தில்
குரூப்-1 தேர்வு மூலம் சிந்துவிற்கு பணி நியமன ஆணை
வழங்கப்பட்டது. இதற்காக ஆந்திரா சட்டசபையில் சட்ட திருத்தம்
கொண்டு வரப்பட்டது.

சிந்து 30 நாட்களில்பணியில் சேர வேண்டும் எனவும்
உத்தரவிடப்பட்டுள்ளது.

——————————————-
தினமலர்

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: