கேட்கக் கூடாத கேள்விகள்

இன்டர்வியூவில் நீங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிற டிப்ஸ் தேவைதான். ஆனால் இன்டர்வியூவில் சில தவறுகள் செய்துவிடுகிறீர்கள். வேலை அங்கு கிடைக்காது எனினும், அத்தவறுகளை செய்யக்கூடாது என்ற விஷயம் புத்திக்கு சுருக்கென புரிவது பிராஃபிட்தானே! அந்த கேள்விகளின் லிஸ்ட் இதோ!

உங்களைப் பற்றி அந்த நிறுவனத்தில் விசாரித்தோம். ஆனால் அவர்கள் உங்களைத் தெரியாது என்று கூறுகிறார்களே?   இதன் அர்த்தம்,  ரெஸ்யூமில் நீங்கள் பொய் சொல்லிவிட்டீர்கள் என்பதே மெய். இதற்கு நீங்கள் சாரி கேட்டாலும் வேலை கிடைக்காது. வேலையில் சேரும் முன்பே டுபாக்கூர் மாக்கான் வேலைகள் பார்த்தால் எப்படி ப்ரோ?

உங்களுடைய ஃபேஸ்புக், ட்விட்டர் அக்கவுண்டுகளை பார்த்தோம். அதில்..?

சமூக வலைத்தளத்தில் நீங்கள் தற்போது வேலைக்கு வந்துள்ள நிறுவனம் குறித்த சர்ச்சை கருத்துகள், உங்கள் தோழர்களோடு செமபோதை பார்ட்டி படங்கள் உள்ளிட்டவற்றைப் பற்றி இக்கேள்வி எழுப்பப்படலாம். இன்று உங்களைப்பற்றி ஆன்லைனில் டைப் செய்தாலே ஜாதகம் வரை தெரிந்து  விடும். எனவே சோஷியல் தளங்களில் பர்சனல் செட்டிங் செட் செய்து கவனமாக கருத்துகளையும் படங்களையும் பதிவிடுங்கள்.

எங்கள் நிறுவனத்தில் மிகச்சரியான திறமையானவர்களை மட்டுமே தேர்ந்தெடுப்போம். இந்தக்கேள்வி உங்களை ஆச்சரியப்படுத்தலாம். இன்டர்வியூவில்  ஆர்வமில்லையென்றால் நீங்கள் ஒதுங்கிக்கொள்ளலாம் என்பதற்கான நாகரீக சிக்னல் இது. எனவே, துல்லியமான நிதான பதில்களில் ஆர்வத்தை பதிவு செய்தால் வேலை கிடைக்க சான்ஸ் உண்டு.

உங்களின் ஷர்ட்டில் என்ன? பற்களில் கறையிருக்கிறதே?

இது ஃபர்ஸ்ட் இம்ப்ரஷன் சார்ந்த கேள்வி. எனவே, முடிந்தளவு நீட்டான டிரெஸ்ஸில்  ஒருமுறைக்கு இருமுறை கண்ணாடியில் உங்கள் தோற்றத்தை  செக் செய்துவிட்டு  இன்டர்வியூவுக்கு செல்லுங்கள்.  இந்த  கேள்வி கேட்கப்படுவதை  தவிர்ப்பது சிறப்பு.

நீங்கள் இந்த வேலைக்கு பொருத்தமானவர் என்று நினைக்கிறீர்களா?

இந்தக் கேள்வியை ஹெச் ஆர் கேட்கும் நொடியிலேயே  நீங்கள் வேலைக்கு ஆகமாட்டீர்கள் என்பதே  பிராக்டிகல்  நிஜம். எனவே முடிந்தவரை உண்மையைச் சொல்லி வேலைக்கான தகுதிகளை ஷார்ட்டாக  முன்வைக்கலாம். சின்ன முயற்சிதானே ப்ரோ?

ஜெ.திருமால்முத்து
நன்றி- முத்தாரம்

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: