கருணை புரிவாய் கார்த்திகேயா…!

Tamil_News_large_1814924_318_219.jpg

ஆடிக்கார்த்திகை நன்னாளான இன்று முருகனை
வழிபட்டு வாழ்வில் சகல வளமும் பெறுங்கள்.

■ நிலவாக பிரகாசிக்கும் முருகா! என் கண்கள் காண்பதாக
இருந்தால் உன் திருவடிகளை காணட்டும். என் உதடுகள்
உன் திருப்புகழை பேசட்டும். இரவும் பகலும் என் மனம்,
உன் பெருமையை மட்டும் சிந்திக்கட்டும்.
இந்த அரிய வரத்தை தந்தருள வேண்டும்.

■ மாமரமாய் நின்ற சூரனை பிளந்தவனே!
கற்றவர் புகழும் ஞான பண்டிதனே!
செவ்வானம் போல சிவந்த மேனியனே!
கடம்ப மலரை விரும்பி அணிபவனே!
அறிவுக்கண்ணைத் திறந்து ஞானம் அருள்வாயாக.

■ கருணைக்கடலே! கந்தனே! சிவனின் நெற்றிக்கண்ணில்
உதித்த அருட்சுடரே! வண்ண மயில் மீது வலம் வருபவனே!
வள்ளி மணாளனே!
இதயமாகிய குகையில் வீற்றிருக்கும் குகனே!
உனது திருவடிகளை சிந்திக்கும் பாக்கியத்தைத்
தந்தருள்வாயாக.

■ திருமாலின் மருமகனே! தெய்வானை மணாளனே!
சேவல் கொடியோனே! பார்வதி பெற்ற பாலகனே! மயில்
வாகனனே! கார்த்திகேயனே!
கிரகதோஷம் தாக்காமல் கருணை புரிய வேண்டும்.

■ மலைக்குத் தெய்வமான குறிஞ்சிநாதனே!
அன்பர் குறை தீர்ப்பவனே! மயிலேறும் மாணிக்கமே!

தயாபரனே! முன்செய்த பாவத்திலிருந்து விடுவித்து,
வாழ்க்கைப் பயணத்திற்கு வழித்துணையாய்
வந்தருள்வாயாக.

■ கார்த்திகைப் பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்ட
தவப்புதல்வனே! சரவணப் பொய்கையில் தவழ்ந்தவனே!
தந்தைக்கே பாடம் சொன்ன குருநாதனே!
செல்வச்செழிப்பைத் தந்தருள்வாயாக.

—————————————-
நன்றி- தினமலர்

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: