கண்களைப் பாதுகாப்போம்!

சா.காமராஜ்

நன்றி- விகடன்

———

கண்கள்… இருப்பவருக்கு ஆயுதம்; இல்லாதவருக்கு இருள். கண்கள் மூலமே நம் வாழ்க்கை ஓடுகிறது. நம் செயல்களில் 70 சதவிகித வேலைகளைக் கண்களைக் கொண்டே செய்கிறோம். சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு வரும் கண் நோய்கள் மற்றும் குறைபாடுகள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகின்றன. சிறு வயதிலேயே குழந்தைகள் கண்ணாடி அணியும் அவஸ்தையை அனுபவிக்கத் தொடங்குகிறார்கள். அதைச் சரிசெய்ய என்னென்ன பாதுகாப்பு முறைகள் உள்ளன என்பதைப் பற்றி குழந்தை நல மருத்துவர் கல்பனா என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களுக்கு எதற்கு செல்போன், லேப்டாப்… இதனால் குழந்தைகளின் கண்கள் பாதிக்குமே தவிர நற்பலன்கள் கிடைக்க வாய்ப்பில்லை.

குழந்தைகளால் சரியாகப் படிக்க முடியாவிட்டால் அது கண்குறைபாடாகக்கூட இருக்கலாம். எனவே கண்மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.

கண்ணின் கருவிழி நிற்காமல் நகர்ந்துகொண்டே இருப்பது, அடிக்கடி கண்கள் சிவந்துபோதல், மெட்ராஸ் ஐ, கண்களில் பூச்சி விழுந்துவிட்டால், கண்களில் பென்சில், பேனா தெரியாமல் குத்திவிட்டால் உடனடியாகப் பெற்றோரிடம் சொல்லி கண் மருத்துவரை அணுகுவதால், மேற்கொண்டு எந்த விபரீதங்களும் நடக்காமல் தவிர்க்கலாம். கண்களுக்கு எந்தவித சுய மருத்துவமும் செய்துகொள்வது நல்லதல்ல.

எடை குறைவான, பொருத்தமான, பல வண்ண ஃப்ரேம்களில் அழகான வடிவமைப்புகளில் கண்ணாடிகள் வருகின்றன. அதை அணிந்துகொள்வதுதான் பாதுகாப்பானது. லென்ஸ் அணிவதால், சிலருக்கு அலர்ஜி உண்டாகும். சிலருக்கு அதை முறையே பராமரிக்கத் தெரியாததால் கண் தொற்றுகள் உருவாகும். லென்ஸை விட கண்ணாடிகளே குழந்தைகளுக்கு பெஸ்ட் சாய்ஸ்.

காலையில் எழுந்தவுடன், கண்களில் பீளை, நீர் வந்தால் அதைக் கண்டு பயம் கொள்ள வேண்டாம். உடற்சூடு, கண்ணீர்ப்பை அடைப்பு போன்றவை காரணங்களாக இருக்கலாம். தொடர்ந்து இப்படி அழுக்கு சேர்ந்தால் கண் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

நேரத்துக்கு ஆரோக்கியமான உணவுகள், ஆழ்ந்த தூக்கம் போன்றவை கண்களுக்கு நல்லது.

வைட்டமின் ‘ஏ’ சத்து நிறைந்த மீன் எண்ணெய், பப்பாளி, கேரட், கீரைகள், முட்டை, கறிவேப்பிலை, தக்காளி, பசலைக் கீரை, ஈரல், ஏழு நிறக் காய்கறிகள், பேரீச்சம்பழம் ஆகியவற்றைச் சாப்பிட வேண்டும்.

படுத்துக்கொண்டு படிப்பது, குறைவான வெளிச்சத்தில் படிப்பது, ஓடும் வண்டியில் அமர்ந்துகொண்டு படிப்பது போன்றவை  நிச்சயம் கண்களைப் பாதிக்கும்.

தேர்ந்த யோகா நிபுணரிடம் கண் பயிற்சிகளை எப்படிச் செய்வது எனக் கற்றுக்கொள்ளலாம். இதனால், கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற கண் பிரச்னைகளை வராமல் தடுக்கலாம்.

கூர்மையான எந்தப் பொருளையும் வைத்து விளையாட குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது. பென்சில், பேனா, காம்பஸ் போன்றவற்றைக் கவனமாகக் கையாள்வது எப்படி எனப் பெற்றோர் சொல்லித் தர வேண்டும்.

ஊட்டச்சத்துள்ள உணவும் உறக்கமும் மருத்துவரின் ஆலோசனையும் குழந்தைகளின் கண்களைப் பாதுகாக்கும்!

குழாய் நீரை உள்ளங்கையில் ஏந்தி, அதில் ஒவ்வொரு கண்ணாக வைத்து 10 முறை சிமிட்டுவது நல்லது. இது கண்களை ரிலாக்ஸாக்கும்.

கோணல் பார்வை, சீரற்ற பார்வை போன்றவை கண் குறைபாட்டின் அறிகுறி. தொலைக்காட்சி பார்த்தால், நிழல் போல விழுவது; கரும்பலகையைப் பார்த்தால் வெளிச்சம் அடிப்பது. இவையெல்லாம் உங்கள் குழந்தைக்கு இருந்தால், தலைவலியும் சேர்ந்து இருக்கும். எனவே, அடிக்கடி தலைவலி எனச் சொல்லும் குழந்தைகளை அலட்சியப்படுத்தாதீர்கள்.

அடிக்கடி கண் துடிப்பது, கண்ணில் நீர் வழிவது, பார்வை மங்கலாகத் தெரிவது, ஒரு கண்ணை மூடிக்கொண்டு மறு கண்ணால் பார்க்கும் பழக்கம் போன்ற பிரச்னைகள் இருந்தால், உடனடியாக கண் மருத்துவரை அணுகவேண்டும்.

அதிகமாகத் தொலைக்காட்சி, கணினி, செல்போன், லேப்டாப் பார்ப்பதைக் குறைக்கவேண்டும். அதிகமான ஒளியை நீண்ட நேரம் பார்த்தால், கண்கள் வறண்டு போகும். மின்னல், திடீர் வெளிச்சம், வெல்டிங் வெளிச்சம் போன்றவை கண்களுக்குப்
பாதுகாப்பானவையல்ல.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: