சினிமாவில் கைகொடுக்கும் சீரியல் பாடம்: ரஞ்சனா சுரேஷ் நேர்காணல்

serila_3183502f.jpg

 

சன் தொலைக்காட்சியில் ‘குலதெய்வம்’, ‘சுமங்கலி’
ஆகிய தொடர்களில் நடித்துவரும் ரஞ்சனா சுரேஷ்,
வெள்ளித்திரையிலும் ‘துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’,
‘கீ’, ‘பில்லா பாண்டி’, சமுத்திரகனி நடிக்கும் படம்,
பொன்ராம் இயக்கும் படம் என்று டைரியை நிரப்பி
வைத்திருக்கிறார்.

‘‘நடிக்க வரும்போது குதிரை மாதிரி ஓடி நமக்குன்னு
ஓரிடத்தைப் பிடிக்கணும்னு வேகம் இருந்தது. இப்போ,
நடிப்புக்கு நிறைய பாராட்டுகள் குவிய ஆரம்பித்ததும்
குதிரையைவிட இன்னும் வேகமாக ஓடணும்னு தோணுது’’
என்கிறார் ரஞ்சனா சுரேஷ்.

அவருடன் ஒரு நேர்காணல்..

உங்களைப் பற்றி?

சொந்த ஊர் தேனி மாவட்டம் பெரிய குளம்.
அப்பா விவசாயி. கணினித் துறையில் படிப்பை முடிச்சேன்.
திருமணத்துக்குப் பிறகு சென்னைவாசி. நடிப்புக்குள்ள வந்து
2 வருஷம் ஆச்சு. ஆரம்பத்துல நடிக்கணுங்கிற ஆசை வந்ததே
இல்லை.

அப்பப்போ ஏதாச்சும் புதுசா செய்யணும்கிற ஆர்வம் மட்டும்
இருந்தது. அந்த மாதிரிதான் ஒரு நாள் ஆடிஷனுக்கு வந்தேன்.
அதுல எளிதா தேர்வாகி நடிக்குற வாய்ப்பு அமைந்தது.

‘கணினித் துறையில இவ்ளோ படிச் சிட்டு நடிக்கிறதாவது?’ன்னு
வீட்டில் பயங்கர எதிர்ப்பு.

வீட்ல சமையல் செய்தாக்கூட ‘நல்லா இருந்திச்சு’ன்னு
சாப்பிடுறவங்க பாராட் டணும். அப்போதான் அடுத்த நாள்
இன்னும் உற்சாகத்தோட சமைப்பேன். அதேபோல, ‘நடிப்புலயும்
கட்டாயம் சாதிச்சு, பாராட்டு வாங்குவேன்’னு என் விருப்பத்தை
தெளிவா சொல்லி ஓகே வாங்கினேன்.

இப்போ சின்னத்திரை, சினிமானு பயணம் நகர்கிறது.

தொலைக்காட்சி தொடர் மூலம் கிடைக்கிற நற்பெயர், சுதந்திரம்
ஆகியவை சினிமாவில் இருப்பதில்லை என்று சின்னத் திரை
நடிகைகள் பலரும் கூறுகின்றனர். உங்களால் எப்படி இரண்டிலும்
கவனம் செலுத்த முடிகிறது?

சினிமா, தொடர் இரண்டையும் அள வோடுதான் ஏற்று நடித்து
வருகிறேன். தொடர்களை ஒப்புக்கொள்ளாமல், சினிமாவில்
மட்டுமே கவனம் செலுத்த லாம். ஆனால், எனக்கு சின்னத்திரை
தொடர்கள் என்பது பள்ளிக்கூடம் போற மாதிரி. அங்கு நடிப்பில்
பெறுகிற பயிற்சியை சினிமாவில் வெளிப்படுத்த முடிகிறது.

சமீபத்துல மிஷ்கின் சாரோட ‘துப்பறிவாளன்’ படத்தின்
ஒரு காட்சியில் நடித்தபோது ரொம்பவே பாராட்டினார்.
தொடர்களில் பெற்ற பயிற்சியோடு அதை அணுகியதால்தான்
என்னால் எளிதாக செய்ய முடிந்தது. எனவே, என்னைப்
பொறுத்தவரை சினிமா, தொடர் இரண்டுமே முக்கியம்தான்.

குறிப்பிடத்தக்க கதாபாத்திரம் ஏதா வது செய்திருக்கிறீர்களா?

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்தி கேயன், சமந்தா நடிக்கும்
படத்தில் காமெடி ரோல் செய்கிறேன். நண்பர்கள் பலரும்
‘ஏன் காமெடி?’ என்பதுபோல கேட்டார்கள். ஏன், காமெடி
கதாபாத் திரம் ஏற்கக்கூடாதா?

காமெடி, எமோஷ னல்ல கோவை சரளா மேடம் பண்ணி னதை
அவ்வளவு எளிமையாக யாரா லும் ரீச் பண்ண முடியலையே.
சின்ன ரோல் என்றாலும் நடிப்புதான் முக்கியம்!

சிலம்பப் பயிற்சி எடுத்திருக்கிறீர் களாமே?

தினசரி வாழ்க்கையில் இருக்கும் பல வேலைகளுக்கு நடுவே
ஒவ்வொரு வருஷமும் ஏதாவது ஒரு புது விஷயம் பண்ணனுங்கிறது
என் பாலிசி. ஒரு வருஷம் நீச்சல் கத்துக்கிட்டேன். ஒரு வருஷம்
கீபோர்டு கத்துக்கிட்டேன். சிலம்பம் கத்துக்கணும்னு ரொம்ப
நாளா ஆசை. இப்போ அதையும் கத்துக் கிட்டேன். பொன்ராம்
இயக்கத்தில் உருவாகிவரும் படத்திலும் சிலம்பம் சார்ந்த
காட்சிகள் இருக்கு.

‘சமந்தா சிலம்பம் சுற்றும் காட்சிகளுக்கு டூப் செய்றீங்களா?’ன்னு
கேட்டாங்க. நான் தவிர்த்திட்டேன். அதன்பிறகு அமைந்ததுதான்
சூரிக்கு ஜோடி யாக நடிக்கும் கதாபாத்திரம். அது வும் காமெடி
கதாபாத்திரம். கண் டிப்பா அந்த ரோல்ல நல்ல பெயர் கிடைக்கும்.

——————————————
மஹா
தி இந்து

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: