108 அடி விஸ்வரூபம்

திருவண்ணாமலை வந்தவாசிக்கு அருகில் உள்ள கொரக்கோட்டை
கிராமத்தில் இருக்கும் குன்றிற்குத் தெரியாது தான், விஸ்வரூப
பெருமாள் ஆகப்பாகிறோம் என்று!

ஏழு தலை கொண்ட பாம்புக்கு நடுவே பதினொரு முகங்களுடனும்,
22 கரங்களுடனும் பக்தர்களை அருள்பாலிக்க விஸ்வரூப பெருமாள்
எழுந்தருள இருக்கிறார்.

ஸ்தல புராணம் போல சிலை பராணமும் நம்மை வியப்பில்
ஆழ்த்தின.

கர்நாடக மாநிலம் தெற்கு பெங்களூருவில் இருக்கிறது ரிஜிபுரா
நகரம். இப்பகுதி மக்களால் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு
ஏக்கர் பரப்பளவில் கோதண்டராம சுவாமி கோயில் கட்டப்பட்டது.

அப்பொழுதே இக்கோயிலில் 108 அடி விஸ்வரூப பெருமாள்
சிலையை அமைக்க வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால்
அதற்கு அப்பொழுது செயல் வடிவம் கொடுக்கக்கூடிய அளவிற்கு
நிதி ஆதாரமோ, கடவுள் பிராப்தமோ இல்லை.

காலம் கனிந்து 2009ம் ஆண்டு அறக்கட்டளையினர் சிலை அமைக்க
முடிவு செய்தனர். இதற்காக தரமான பாறையை நாடு முழுவதும்
செயற்கைக்கோள் மூலம் தேடிய அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு
கொரக்கோட்டையிலுள்ள மிகப் பெரிய பாறையாக இருந்த
குன்றைத்தேர்வு செய்தனர்.

பாறையை ஓர் ஓரமாய் உடைத்து சிலைக்கு உகந்ததா என ஆய்வு
செய்து அதில் ஜீவன் இருக்கிறதா என்று பூரண திருப்தி அடைந்தனர்.
அதன்பிறகு இப்பாறையை கையகப் படுத்தி வெட்டி எடுக்க மத்திய,
மாநில அரசுகளுக்கு விண்ணப்பித்தனர்.

2010ம் ஆண்டு துவங்கிய அனுமதி கேட்புக்கு 2014ல் தான் அனுமதி
கிடைத்தது.

அதைத் தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக நாற்பத்துக்கும்
மேற்பட்ட தொழிலாளர்கள் ஸ்தபதிகளின் தலைமையின் கீழ் இரவு
பகலாக பணியாற்றி அறுபத்தி நான்கு அடி உயரத்தில் இருபத்தி
ஆறு அடி அகலத்தில் ஒரு பாறையும், இருபத்தி நான்கு அடி உயரம்
முப்பத்தி மூன்று அடி அகலத்தில் இன்னொரு பாறையும் என்று
ஒரே பாறையை இரண்டாக பிரித்தனர்.

அறுபத்தி நான்கு அடியில் பெருமாளின் சிரம் முதல் பாதம் வரையும்.
இருபத்தி நான்கு அடி உயரமுள்ள இன்னொரு பாறையில் ஏழு தலை
நாகமும் இருபது அடியில் சிலையை நிறுத்தி அடிபீடமும் என
மொத்தம் 108 அடிகளில் மூன்று பிரிவுகளாகத் தயாராகிறது.

இருந்தாலும் அத்தனையும் ஒரே பாறையில் ஒரு அடுக்கின் கீழ்,
தனித்தனியாகப் பிரித்து வடிவமைக்கப்பட்டு பொருத்தப்பட உள்ளது.
இதில் மேல் பாகம் 330 டன் எடையும் பாம்பு வடிவம் செதுக்கும் பாறை
230 டன் எடையும் கொண்டது.

இதில் பெரிய பாறையில் பெருமாளின் அன்புமுகமும்,
அருள் தரும் கரமும் மட்டும் செதுக்கப்பட்டு மீதி உருவம்
பெங்களூருவிற்குக் கொண்டுபோய் செதுக்கி முழுமையடையும்
என்கிறார்கள்.

இவ்வளவு எடைகொண்ட பாறைகளை எப்படி கொண்டு
போவது? எதன் மூலம் தூக்கிவைப்பது? என்று எல்லோரும்
ஆச்சர்யத்துடன் காத்திரு்க அந்த ஆச்சர்யத்திற்கு விடை
இப்பொழுது வந்தவாசி கொரக்கோட்டையில் நிகழ்ந்து
கொண்டிருக்கிறது.

ஜெர்மன் நாட்டு ஊக்சில் ஹைட்ராலிக் சிஸ்டம் மூலம் கொஞ்சம்
கொஞ்சமாக பாறையை உயர்த்த இரண்டு பக்கமும் அடியிலும்
வலுவான மரக்கட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். இப்பொழுது
லாரியின் டிரக் அப்படியே பாறைக்குக் கீழே டேபிளில் டிராயர்
மாதிரி உள்ளே நுழையும். நுழைந்ததும் கனரக டிரக்கிலுள்ள
ஹைட்ரலிக் சிஸ்டம் மூலம் அட்ஜஸ்ட் செய்து பாறையை சரியாக
தன் மீது நிலை நிறுத்திக் கொள்கிறது.

இந்த டிரக்கிற்கு 170 டயர்கள் என்பது ஒரு கூட்ஸ் ட்ரெய்ன் அளவிற்கு
ஆச்சர்யம்!

இந்த ஆச்சர்யம் வரும் 18ம் தேதி ஞாயிற்றுக் கிழமை
திருவண்ணாமலை மாவட்ட மக்கள் ஒன்று திரண்டு விசேஷ
பூஜைகளுடனும், பிரார்த்தனைகளுடனும் வணங்கி வழியனுப்பி
வைக்கப்பட உள்ளது.

தௌ்ளார், வந்தவாசி, செய்யார், காஞ்சிபுரம் பைபாஸ், ஆற்காடு,
வேலூர் வழியாக பெங்களூரு செல்கிறது. ஒரு நாளைக்கு அதிபட்சம்
பதினைந்து கி.மீ. மட்டுமே செல்லுமாம்.

அப்படிச் சென்றால் குறைந்தது இருபது நாட்கள் ஆகும் என்கிறார்கள்.
அல்லது இரவில் மட்டுமே டிரக்கை கொண்டுபோகவும் ஏற்பாடு
செய்யப்பட்டு வருகிறது.

இரவில் நான்கிலிருந்த ஐந்து கி.மீ. வரையே செல்ல முடியும் என்பதால்
பெங்களூரு சென்றடைய ஒண்ணரையிலிருந்து இரண்டு மாதம்
என்றும் சொல்கிறார்கள். மேலும் அதிக எடை என்பதாலும், ஏறுவது
சிரமம் என்பதாலும் கூடுமானவரை பாலங்களைத் தவிர்த்து, சாலை
மார்க்கமாகவே செல்லத் திட்டமிட்டப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாமல்
செல்லும் பாலங்களில் கனத்த இரும்புத் துண்டுகளால் முட்டு
கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சில இடங்களில் பிரத்யேக அரசு அனுமதியுடன் புதிதாகச் சாலை
போடப்பட்டுள்ளது. சில வளைவுப்பாதைகளில் வீடுகள் இடைஞ்சல்
செல்வதால் அதை இடித்துவிட்டு டிரக் போன பின்பு கட்டித்தரவும்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!

போகிற வழியெங்கும் பக்தர்களின் வரவேற்பு அதிகமாக இருக்கும்
என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டிரக்கில் போக இருக்கிறார்
. இவர் நிஜமாலுமே மலையப்பசுவாமிதான்!

————————————-

– அன்புவேலாயுதம்
கல்கி

 

 

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: