அருள்மிகு ஜெகந்நாதர் கோவில்…

thiurmazhisai-kovil.jpg

சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில்
28 கிலோ மீட்டர் தொலைவில் திருமழிசை உள்ளது.

சென்னையில் மக்கள் நெருக்கடி அதிகரித்து வருவதால்,
திருமழிசையை “துணை நகரம்” ஆக்க தமிழக அரசு
திட்டமிட்டுள்ளது.

எனவே இன்னும் சில ஆண்டுகளில் திருமழிசை எனும் பெயர்
தினமும் மக்கள் உச்சரிக்கும் பெயராக மாற உள்ளது.

ஆனால் இந்த ஊர் ஆதி காலத்தில் வைணவமும், சைவமும்
செழித்து வளர்ந்த புண்ணிய பூமியாக இருந்தது என்பது
பலருக்கு தெரியாது. ஈசனும், மகா விஷ்ணுவும், அம்பிகையும்
அருள்புரியும் தலங்கள் எத்தனையோ ஆயிரம் உள்ள
போதிலும் உலகிலேயே தனி மகிமை பொருந்திய தலமாக,
தன்னிரகற்றத் தலமாக திருமழிசை கருதப்படுகிறது.

இத்தலத்தில் ஜெகநாத பெருமாள் ஆலயம், ஒத்தாண்டேஸ்வரர்
ஆலயம் உள்ளன. பன்னிரு ஆழ்வார்களில் 4-வது ஆழ்வாரான
திருமழிசை ஆழ்வார் இத்தலத்தில்தான் தோன்றினார்.

துவார யுகத்தில் இத்தலம், “மகிசாரசேத்திரம்” என்றழைக்கப்
பட்டது. 13-ம் நூற்றாண்டில் இது திருமழிசை சதுர்வேதி மங்கலம்,
என்றும் 13-ம் நூற்றாண்டில் திருமழிசை அகரம் என்றும்
அழைக்கப்பட்டது.

அதன் பிறகு சுருங்கி திருமழிசை ஆகிவிட்டது.
இந்த ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்
பட்டதாகும். மிகப் பழமையான இங்கு வழிபாடு செய்தால்,
2 திவ்ய தேசங்களில் வழிபட்ட பலன்கள் கிடைக்கும் என்பது
ஐதீகமாகும். 5 நிலை 7 கலசங்களுடன் உள்ள கோபுரத்தை
பயபக்தியுடன் வணங்கி விட்டு உள்ளே சென்றால்
2 பிரகாரங்களுடன் கோவில் அமைந்திருப்பதை காணலாம்.

கருவறையில் ருக்மணி- சத்யபாமா சமேத ஜெகந்நாதன்
பெருமாள் அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார்.
சமார் 7 அடி உயரத்தில் கம்பீரமாக இருக்கும் அவரது அழகு
பக்தர்களை நிச்சயம் ஈர்க்கும். அவருக்கு ஆகாசன
அடிப்படையில் பூஜைகள் நடத்தப்படுகிறது.

இத்தலத்தில்தான் மார்க்கண்டேய முனிவருக்கும்,
பிருகு முனிவருக்கும் பெருமாள் காட்சிக்கொடுத்து அருளினார்.
இதை பிரதிபலிக்கும் வகையில் மூலவர் அருகில் 2 முனிவர்களும்
அமர்ந்து வணங்கியபடி உள்ளனர்.

உள் பிரகாரத்தின் ஒரு பகுதியில் திருமழிசை ஆழ்வார் சன்னதியும்
பெரிய அளவில் உள்ளது.

———————————-

http://www.siruvarmalar.com/temples/

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: