புதுவையில் இருந்து சென்னைக்கு கப்பல் மூலம் சரக்கு போக்குவரத்து

புதுச்சேரி
புதுவையில் இருந்து சரக்கு போக்குவரத்தை தொடங்க சென்னை எண்ணூர் துறைமுகத்துடன் புதுவை துறைமுகம் ஒப்பந்தம் செய்து உள்ளது. இதையொட்டி கப்பல்கள் வந்து செல்வதற்கு வசதியாக புதுவை கடற்கரை முகத்துவார பகுதி தூர்வாரும் பணி நடந்து வருகிறது.

மேலும் உப்பளம் புதிய துறைமுகத்தில் சரக்குகளை கையாள ஏதுவாக அங்குள்ள குடோன்கள் சீரமைக்கப்பட்டு அங்கு கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர சுங்க அலுவலகம் செயல்படவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அமைச்சர் ஆய்வு

இதையொட்டி புதுவை துறைமுகத்தில் நடைபெறும் பணிகளை துறைமுகத்துறை அமைச்சர் கந்தசாமி, தொகுதி எம்.எல்.ஏ. அன்பழகன் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது முகத்துவாரம் தூர்வாரும் பணி குறித்து துறைமுகத்துறை செயற்பொறியாளர் ராஜேந்திரனிடம் அமைச்சர் கந்தசாமி கேட்டறிந்தார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

புதுவையில் இருந்து கப்பல் மூலம் சரக்குபோக்குவரத்தை ஜூலை மாதம் முதல் தொடங்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் துறைமுகம் தூர்வாரும் பணியில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக காலதாமதமாகிவிட்டது.

ஆகஸ்டு மாதம் முதல் தொடங்கும்

துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணி இன்னும் ஒரு மாதத்திற்குள் முடிந்துவிடும். புதுவை துறைமுகத்தில் இருந்து சரக்கு போக்குவரத்தை தொடங்குவது சம்பந்தமாக முதல்–அமைச்சர் நாராயணசாமி, மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை மந்திரி நிதின்கட்காரியை சந்தித்து பேசியுள்ளார்.

ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் புதுவையில் இருந்து சென்னைக்கு கப்பல் மூலம் சரக்கு போக்குவரத்து தொடங்க உள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் கந்தசாமி கூறினார்.

தினத்தந்தி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: