அப்பா, மகன் உறவுதான் ஒவ்வொருத்தர் வாழ்க்கைக்கும் அர்த்தம் கொடுக்குது!

 

‘‘எந்த ஆடம்பரமும் இல்லாமல், பதறித்துடிக்கிற ஆக்‌ஷன்,
நம்ம மேலேயே தெறிக்கிற ரத்தம்னு இல்லாமல்… ஒரு
அருமையான, எளிமையான படம் ‘பள்ளிப்பருவத்திலே’.

இன்னும் சொல்லப் போனா இந்தப் படத்தோட அழகே அதனோட
எளிமைதான். ஒரு சராசரி இளைஞனை சுத்தி நடக்கற கதை.
அசலான கதைகள் எப்பவும் ஈர்க்கும்.

தஞ்சாவூருக்குப் பக்கத்தில் இருக்கிற எங்க கிராமம் ஆம்பலாப்பட்டு.
அதில் அரசு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தவர்
சாரங்கன். ஆர்மிமேன் மாதிரி கண்டிப்பு. ஒரு பையன் லீவு போட
முடியாது. காரண காரியம் இல்லாமல் இருந்தால் அடுத்த நிமிஷம்
பள்ளிக் கூடத்தில் இருக்கணும்.

அவருக்கு இருக்கிற ஒரு பையன். அவனுக்கும், அவருக்கும்
இருக்கிற உறவு.

அப்பா, மகன் உறவு இருக்கே… அதிலதான் எத்தனை அழகு!
எத்தனை அர்த்தம்! ஒவ்வொருத்தர் வாழ்க்கைக்கும் அர்த்தம்
கொடுக்கிற உறவு அது. இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்துட்டு
பிரிட்டிஷ்காரன் எப்பவோ போயிட்டான்.

ஆனால், பல குடும்பங்களில் அப்பாவுக்கும் மகனுக்கும் நடுவுல
இன்னும் சுதந்திரப் போராட்டம் நடந்துக்கிட்டேதான் இருக்கு.

‘இரண்டு வயசில் உன் விரலைப் பிடிச்சுக்கிட்டு நடந்தது தப்புதான்.
அதுக்காக நீ என் கையை விடாம பிடிச்சு வைச்சிருக்கியே,
நியாயமா’ன்னு இப்ப பையன் கேட்கிறான். அப்படியொரு சரியான
பாதையில் வராத பையனுக்கும் அப்பாவிற்கும் இடையில் இருக்கிற
போராட்டமும், அதன் முடிவும்தான் ‘பள்ளிப்பருவத்திலே’ படம்…’’
வித்தியாசமாகப் பேசுகிறார் இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர்.

இளம் தலைமுறையினருக்கான படமா..?

ஆமாம். நான் சொன்ன மாதிரி நிறைய கேள்விகள் பசங்களுக்குள்ளே
இருக்கு. ஜெனரேஷன் கேப் இப்ப அதிகமாகிப் போச்சு. அப்பாவை
வில்லனாகப் பார்க்கிறாங்க. இல்லாட்டி காமெடியன் ஆக்கிடுறாங்க.

இப்படி ஒரு இடத்துல, இந்த கேரக்டராக ஹெட்மாஸ்டராக
கே.எஸ்.ரவிகுமார்தான் மனசில் வந்தார்.

அவரிடம் போய் கதையைச் சொன்னால் ‘ரொம்பவும் நல்லா
இருக்கு. அருமையாக படமாக்கினால் விருதுக்கான எல்லா
அடையாளங்களும் இருக்கு’ன்னு சொன்னார். அவருக்கு நிறைய
ஸ்கோப் இதில் இருந்தது.

அப்படி ஒரு மாயமும் இந்தக் கதையில் இருக்கு. கொஞ்சமும்
ஈகோ காட்டாமல் அப்படியே தன்னைக் கொடுக்கிற மனிதர்.
அவரும் ஊர்வசியும் சேர்ந்து நடிச்சதெல்லாம் செட்டில் சிரிப்பு
தாங்க முடியலை.

புதுசா ஹீரோ, ஹீரோயின் செலக்ட் பண்ணியிருக்கீங்க!

எனக்கு ‘காதல் கொண்டேன்’ தனுஷ் மாதிரி ஒருத்தர் வேணும்.
இசையமைப்பாளர் சிற்பியின் மகன் சட்டுனு என் கேரக்டரை
அப்படியே கொண்டு வந்தான். ரொம்ப இயல்பில் இருந்தான்.

படத்தை முடிச்சிட்டு பார்க்கும்போது நந்தன்ராமை தேர்ந்தெடுத்ததில்
எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

இதில் சில காதல் இடங்களும் இருக்கு. அவங்களுக்குள் காதல்
உணர்வுகள் அரும்புவது சகஜமே. காதல் மாதிரி மனசை
சுத்தப்படுத்துறதும் கிடையாது, கிறுக்குப் பிடிக்க வைக்கிறதும்
கிடையாது.

தாத்தா பார்த்த காதலும், அப்பா கண்ட காதலும், நான் அனுபவித்த
காதலும் அடிப்படையில் ஒன்றே. வெண்பாதான் ஹீரோயின்.
‘கற்றது தமிழ்’, ‘சத்யம்’ படத்தில் நடிச்சிருந்தாங்க.

அழகு தமிழ் முகம். தமிழ் சினிமாவிற்கு நிச்சயமா ஒரு நல்ல
கதாநாயகி உத்தரவாதமா கிடைப்பார். ஒரு படம் என்னென்ன
அனுபவங்களைத் தரணும்னு எனக்குள்ள ஒரு கணக்கு இருக்கு.
அதுக்கும் தகுதியாக வந்திருக்கு

இந்தப் படம். ஒரு அசல் வாழ்க்கையை கொஞ்சமும் நகாசு ப
ண்ணாமல், ஏத்தி வச்சு சொல்லாமல், அச்சு அசலாக
வந்திருக்கிறதுதான் விசேஷம்.

சொல்லியே ஆகணும்ங்கிற உண்மை இதில் இருக்கு. கதையோட
உங்களைக் கூட்டிட்டுப் போற முயற்சியில் இறங்கியிருக்கேன்.
சினிமாவில் அதிர்ஷ்டமெல்லாம் இல்லை. ஆரம்பித்திலிருந்து
நம்மை உழைப்புதான் தூக்கிட்டு வரும். பார்த்திட்டு சொல்லுங்க.

பாடல்கள் அருமையாக இருக்கு…

விஜய் நாராயணன்தான் மியூசிக். இசை கனிவாகவும், தெளிவாகவும்
மனசைத் தொடுகிற மாதிரியும் இருக்க வேண்டிய படம். இளையராஜா,
ஏ.ஆர்.ரஹ்மானிடம் பணிபுரிந்தவர். அதற்கான தகுதி அபரிமிதமா
இருக்கு.

கவிப்பேரரசு வைரமுத்து, என் சகோதரி வாசுகோகிலா, சாரதா
பாட்டு எழுதியிருக்காங்க.

இன்ஸ்டிடியூட் ஸ்டூடண்ட் வினோத்குமார்தான் கேமரா.
நான் நினைக்கிறதை, அப்படியே திரையில் கொண்டு வருகிற
மாயம் அவர்கிட்டே இருக்கு. ஹீரோவும் ஹீரோயினும் புதுசே தவிர,
தம்பி ராமையா, கஞ்சா கருப்பு, ஆர்.கே.சுரேஷ், பொன்வண்ணன்னு
பெரிய அனுபவம் வாய்ந்தவர்களின் கூட்டம்.

ஒரு திரைக்கதை எண்ணத்தில் வந்து சேர்வதோ, அதை
படமாக்குவதோ கூட அடுத்த விஷயம்தான். அதில் முதல் இடத்தில்
இருப்பது தயாரிப்புப் பணிதான்.

எங்கள் எண்ணத்தை தயாரிப்பாளர் டி.வேலுதான் நனவுக்கு கொண்டு
வந்தார். நகைச்சுவைதான் இதில் பெரிய அம்சம். கடைக்கோடி
ரசிகர்களையும் சிரிக்க வைக்கிற இத்தனை ஜனரஞ்சகமான நடிப்பு
கொண்டு வருவது பெரிய கஷ்டம். அது இதில் சாத்தியமாகியிருக்கு!

———————————

-நா.கதிர்வேலன்
குங்குமம்

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: