வாழ்த்த வசதியில்லை…!!

முள்வேலியில் முள் இருக்கும்;
கம்பிவேலியில் கம்பி இருக்கும்;
நெய்வேலியில் நெய் இருக்குமா?

– நெய்வேலி கரன்ட்டை எதிர்பார்த்து பவர்கட்டில்
தவிப்போர் சங்கம்

– சக்தி இளங்கோ,

——————————–

‘’மன்னர் ஏன் கடுப்பா இருக்கார்..?’’

‘‘டூர் போகலாம்னு சொல்லி போருக்குக் கூட்டிட்டு
வந்துட்டாங்களாம்..!’’

– அ.ரியாஸ்,

———————————

‘‘நம்ம கட்சிக்காரங்க எல்லோரும் ரொம்ப வறுமையில
இருக்காங்கன்னு நினைக்கிறேன் தலைவரே…’’

‘‘எப்படிய்யா சொல்றே..?’’

‘‘உங்க பிறந்த நாள் பேனர்ல ‘வாழ்த்த வசதியில்லை’ன்னு
போட்டு இருக்காங்க பாருங்க!’’

– கே.ஆனந்தன்,

————————————–

‘‘உங்க கிட்னியில கண் இருக்கு… எச்சரிக்கையா இருங்க!’’

‘‘வழக்கமா கல்தானே இருக்கும்… நீங்க புதுசா
சொல்றீங்களே நர்ஸ்?’’

‘‘இது டாக்டரோட கண்…’’

– அ.பேச்சியப்பன்,

————————————

வருவாய்த்துறை, நிதித்துறை, உள்துறை இதுக்கெல்லாம்
அமைச்சருங்க இருப்பாங்க;
படித்துறைக்கு எங்கேயாவது அமைச்சர் இருப்பாங்களா?

– பட்ஜெட்டில் விழும் துண்டை எடுத்து தலைவருக்குப்
போர்த்துவோர் சங்கம்

– பர்வீன் யூனுஸ்,

————————————

‘‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி கேட்டு
நம்ம தலைவர் மானத்தை வாங்கிட்டாரா… ஏன்?’’

‘‘இதுவரை தான் இழந்த டெபாசிட் தொகை எவ்வளவுன்னு
கேட்டுத் தொலைச்சுட்டார்..!’’

– நா.கி.பிரசாத்,

———————————–

பால் பாக்கெட்டுக்குள்ளே பால் இருக்கும்;
முறுக்கு பாக்கெட்டுக்குள்ளே முறுக்கு இருக்கும்.
அது மாதிரி சட்டை பாக்கெட்டுக்குள்ளே சட்டை இருக்குமா?

– எம்ப்ட்டி பாக்கெட்டை எட்டிப் பார்த்து ஃபீல் பண்ணுவோர்
சங்கம்

– ஏ.எஸ்.யோகானந்தம்,

———————————–
குங்குமம்-10 Sep 2012

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: