யோகாசனம்: கொஞ்சம் கவனம்!

 

யோகாசனத்தை கற்க விரும்புபவர்கள் நன்கு பயிற்சி
பெற்ற ஒரு குருவிடம் ஒழுங்காகப் பயிற்சி எடுத்துக்
கொள்ளுதல் நல்லது.

* காலையில் ஆசனங்களைப் பழகுவதே சிறந்தது.

* மாலையிலும் செய்யலாம். ஆனால், உணவு உண்டு,
மூன்று மணி நேரம் கழித்தே செய்ய வேண்டும்.

* யோகாசனம் செய்வதற்கு முன்பு கடுமையான
உடற்பயிற்சிகள் வேண்டாம்.

* யோகாசனத்துக்கு அரை மணி நேரத்துக்கு முன்பும்,
யோகாசனத்துக்கு பின்பு அரை மணி நேரம் கழித்தும்
திரவ பானங்களைப் பருகலாம்.

* ஆசனங்களைச் செய்வதற்கு முன்பு உடலைத் தயார்
நிலைப்படுத்துவதற்காக சில எளிய முன் பயிற்சிகள்
செய்தல் வேண்டும்.

* உடல் உபாதைகள் உடையவர்கள் சில ஆசனங்களைச்
செய்தலாகாது. எதைச் செய்யலாம், செய்யக்கூடாது என்பதை
குருவிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு செய்யவும்.

* ஆசனங்கள் செய்யும்போது, ஓர் ஆசனத்துக்கு அடுத்து
அதற்கான மாற்று ஆசனம் செய்தே அடுத்த ஆசனத்தைச்
செய்தல் வேண்டும்.

* ஆசனங்களுக்கிடையில் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும்.

* ஒவ்வொரு ஆசனத்தின் முடிவிலும், இரு தடவைகள்
மூச்சை நன்றாக இழுத்து விடுதல் வேண்டும்.

* ஆசனங்களை மிக இலகுவாகச் செய்ய வேண்டும்.
உடல் வளைந்து கொடுக்கவில்லை எனில், வலுக்கட்டாயமாகச்
செய்யக் கூடாது. அவரவர் தங்களால் இயன்ற ஆசனங்களையே
செய்தல் வேண்டும்.

* ஆசனங்களை முடிக்கும் போது 3-5 நிமிடங்கள் வரை
சவாசனம் செய்தே முடித்தல் வேண்டும்.

* இறுதியாக நாடி சுத்தி, பிராணாயாமம் செய்து,
20 நிமிடங்கள் வரை தியானம் செய்வது நல்லது.

* எல்லா ஆசனங்களையும் ஒரே நாளில் செய்யவேண்டும்
என்று அவசியமில்லை. ஒவ்வொரு நாளும், ஒருசில குறிப்பிட்ட
ஆசனங்களைச் செய்யலாம்.

* யோகாசனம் என்பது உடற்பயிற்சி அல்ல.
அது மனமும் உடலும் இணையும் அற்புதப் புள்ளி. ஒரு
யோகாசனத்தைச் செய்து முடித்தபின்னர், அதன் பல்வேறு
படிநிலைகளை மனத்தில் மீண்டும் ஓட்டிப் பார்த்து,
தியானம் செய்யவேண்டும். இதன்மூலம், மனமும் உடலும்
ஒருமுகப்படும்.

* உடலின் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்துகொள்ளும்
போதுதான், நம்முடைய உடல் எப்படிப்பட்ட பொக்கிஷம்
என்பது உங்களுக்கு விளங்கும்.

———————————–

-தினமலர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: