பிருந்தாவனம் – திரைப்பட விமர்சனம்

பேசவும், கேட்கவும் இயலாத அருள்நிதி – தான்யா
இடையிலான காதலும், அந்த காதல் நிமித்தமான
சம்பவங்களுமே பிருந்தாவனம்.

அருள்நிதி, சந்தோஷத்தை, தான் இருக்கிற இடத்தில்
கொண்டு வருகிற மனிதன். தன் குறைகளை எண்ணி
வருத்தம் கொள்ளாத மனது. சுகதுக்கங்களை மறைத்துக்
கொண்டு, பக்கத்தில் இருக்கிறவர்களின் நலனுக்காக
உழைக்கிற அவர், நடிகர் விவேக்கின் தீவிர ரசிகர்.

சொந்த வேலைக்காக ஊட்டி வந்த விவேக், அருள்நிதியுடன்
பழக நேரிடுகிறது. பரஸ்பரம் நட்பினால் இருவரின்
மனக்காயங்கள் ஆற்றப்படுகின்றன. இந்த வேளையில்
அருள்நிதியை விடாப்பிடியாக காதலிக்கிறார் தான்யா.

அவரின் காதலை மறுக்கிறார் அருள். இருவரும்
இணைந்தார்களா என பயணிப்பதே மீதிக் கதை.

மாற்றுத் திறனாளிகளின் கொண்டாட்டத் தருணங்களை
அருமையாக முன்வைக்கிறார் அருள்நிதி. அவரின்
முகத்தில் இருக்கிற அப்பாவித்தனம் கேரக்டருக்கு நல்ல
பலம். படம் முழுக்கவே அருள்நிதி செம க்யூட்.

வந்த எந்தப் படங்களையும்விடவும் தான்யா அதிகம்
ஈர்க்கிறார். தன் காதலுக்கு மரியாதை செய்ய அருள்நிதி
மறுக்கும் ஒவ்வொரு தடவையும் மெல்லிய அவமானத்தைச்
சந்திக்கும்போதும், ஆற்றாமையும் கோபமுமாக தடுமாறுவது,
அவர் அன்பை நினைத்து திடுக்கென சிலிர்ப்பது என
பொண்ணு பாஸ் ஆகிவிட்டது.

அருள்நிதியின் தந்தை போன்று எம்.எஸ்.பாஸ்கர் அன்பின்
மொழியில் கச்சிதமாக வெளிப்படுகிறார். இப்பொழுதெல்லாம்
அவரை திரையில் பார்க்கும்போது உடல்மொழியில்
அத்தனைக்கத்தனை பாந்தம்.

காமெடியைவிட, சிநேகத்தை காட்சிப்படுத்திய விதத்தில்
விவேக் அபாரம்! ஆரம்பத்தில் வழக்கத்தின்படி நடிப்பவர்,
பிறகு உணர்ந்து ஆழம் போயிருப்பார் போல… கிரேட்!

‘‘மரம் நட்டுட்டு வரலாம்னு கொஞ்சம் கேப் விட்டேன்.
அதுக்குள்ள மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, பரோட்டா
சூரினு கிளம்பி வந்துட்டாங்க…’’ என காமெடி தட்டுவது
எல்லாம் ஆஸம்! ஆஸம்!

தன் நண்பனுக்காக ஊட்டி வந்திருக்கிற சூழலை விவரிக்கு
ம்போது ஆகச் சிறந்த நுணுக்க நடிப்பு!

எப்பவும் பளீரென வசனங்களில் வெளிப்படுவார் இயக்குநர்
ராதாமோகன். இப்போதும் அப்படியே. நம்மையும்
மாற்றுத்திறனாளிகளின் உலகத்தில் கொண்டு போய்
விடுகிறார். இந்தத் தடவை டைரக்டருக்குத் துணை
போயிருக்கிறார் பொன்.பார்த்திபன்.

ரசனை வசனங்கள், காமெடி தவிர படத்தில் வேறு என்ன
பாஸ் இருக்கிறது என சமயங்களில் தோன்றாமல் இல்லை.

‘டவுட்’ செந்தில், செல் முருகன், விவேக், அருள்நிதி
கூடும்போதெல்லாம் அவர்கள் பேசுவதற்கு முன்பே சிரிக்கத்
தொடங்கி விடுகிறோம். ராதாமோகன் படங்களில்
பாடல்களுக்கு எப்பவும் எதிர்பார்த்துக் காத்திருக்கலாம்.

இந்தத் தடவை ஏமாற்றியிருக்கிறார். ஆனாலும், விஷால்
சந்திரசேகரின் பின்னணி, படத்தின் வேகத்தைஃபாஸ்ட் பீட்டில்
எகிற வைக்கிறது.

ஊட்டியின் குளிரைப் போல சில்லென ஒளிப்பதிவில்
அசத்துகிறது விவேகானந்தனின் கேமரா. அருள்நிதியும்,
தான்யாவும் திருமணம் செய்துகொள்வார்களா என்ற பதட்டத்தை
ஒரே மூச்சில் கொண்டுபோய் காட்டியிருக்கலாம்.

அவர்கள் இருவரின் ஊடல் முடிந்து, கல்யாணம் அவர்கள்
பெற்றோர் கைகளில் நிற்பது வரை ஓவர் காத்திருப்பு!
அழகியலில் ஒரு காதல் கதை.

——————————-

-குங்குமம் விமர்சனக்குழு
குங்குமம்

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: