தொண்டன் – திரைப்பட விமர்சனம்

மனித நேயத்தின் ஒட்டுமொத்த உருவமான ஆம்புலன்ஸ்
டிரைவருக்கு நேர்ந்த அடுக்கடுக்கான சோதனைகளே
‘தொண்டன்’. சமுத்திரக்கனி எல்லோருக்கும் நல்லது
மட்டுமே நினைக்கிறவர்.

அவரது பணியும் உயிர்களைக் காப்பாற்றுகிற முயற்சி
என்பதால் பொருந்திப் போகிறது. சுமுகமாகச் சென்று
கொண்டிருந்தவர், அமைச்சர் மகனின் தூண்டுதலில்
வெட்டப்பட்டவரைக் காப்பாற்ற நேர்கிறது.

இதனால் அவரின் கோபத்திற்கு ஆளாகிறார் கனி. கல்லூரிப்
பெண்ணை வம்புக்கிழுத்து, வகுப்பிலேயே அடிவாங்குகிறார்
அமைச்சரின் இன்னொரு மகன். அவரையும் கொண்டுபோய்,
ஆஸ்பத்திரியில் சேர்க்க முயற்சிக்க, அதற்கு முன்னால்
இறந்துவிடுகிறார்.

அவ்வளவுதான். தம்பியைக் கொன்றுவிட்டதாக நினைக்கும்
நமோ நாராயணன் கொதித்தெழ… கனிக்கு அடுத்தடுத்து
சிக்கல்கள்.

அந்த சோதனைகளை சாதனைகளாக்கி எப்படி சமுத்திரக்கனி
கடந்தார் என்பதே மீதிக்கதை. லட்சியமான மனிதனுக்கு
அப்படியே இடம் தருகிறார் சமுத்திரக்கனி.

எல்லோருக்குமான ஒரு சூப்பர் மனிதனை உருவாக்கித் தந்த
விதத்தில் கனிக்கு வாழ்த்துகள். அவரின் ஒவ்வொரு
வார்த்தையிலும் சமூக அக்கறை கொட்டிக் கிடக்கிறது.

மக்களின் அவஸ்தைகளையும், அரசியல் கட்சிகள் அவர்களைப்
பயன்படுத்திக் கொள்வதையும், மூச்சுவிடாமல் பேசுவது வீர்யம்.
அரசியல்வாதியிடம் காளைகளின் பெயர்களை அடுக்கி,
மூச்சுவிடாமலும், மூச்சு வாங்கியும் பேசுவது ரகளை, ரசனை,
அக்கறை. ஆனால், எடுத்ததற்கு எல்லாம் கதையின் போக்கை
கவனிக்காமல் கருத்திலேயே கவனமாக இருப்பது நெளிய
வைக்கிறது.

என்றாலும், சமூகத்திற்கே ரொம்பவும் இணக்கமான இளைஞனாக
உருவகப்படுத்துவது மரியாதை ஏற்படுத்துகிறது. அப்படியொரு
மாடல் மனிதனுக்கே ஏங்குகிறது மனது.

சுனைனாவிற்கு பெரிதாக இடம் தரவில்லை என்றாலும்
இருந்தவரையில் அழகாக இருந்து, அழகாக சிரிக்கிறார்.
குடிபோதையிலிருந்து மீளும் அருமையான கேரக்டரில் இயல்பில்
மிளிர்கிறார் விக்ராந்த்.

நமோ நாராயணன் உடல் மொழியிலும் சரி, வார்த்தைப்
பிரயோகத்திலும் சரி மாறவே மாட்டேன் என அடம்பிடிக்கிறார்.
கஞ்சா கருப்பு நண்பனாக கனிக்கு அருமையாக கைகொடுக்கிறார்.

இரவு நேரத்தில் கனி அண்ட் கோவுக்கு டேக்கா கொடுத்துவிட்டு
ஓடும் வெள்ளை உருவம் என பெரிதாக நினைத்து
செய்திருக்கிறார்கள்.

ஆனால், அந்த காமெடி ஒர்க்கவுட் ஆகவில்லை. கொஞ்சம்
பிரச்சார அளவைக் குறைத்திருக்கலாம். ஞானசம்பந்தத்தின்
திருக்குறள் வார்த்தைகள் கலகல. கல்லூரியில் நடக்கிற
கலவரத்தின் அதிரடி முடிவு பரபரப்பு. கொஞ்ச நேரமே வந்தாலும்
ஐ.டி ஆபீஸர் மிடுக்கில் தம்பி ராமையா அசத்துகிறார்.

அந்த நேரமே வரும் சூரியும் கலகலப்பில் பின்னி எடுக்கிறார்.
கருத்தெல்லாம் மறந்து, காமெடியில் மட்டுமே இருக்கிற நேரமும்
அதுதான். ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசையிலும்,

ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவிலும் கடும் உழைப்பு தெரிகிறது.
ஜஸ்டின் பாடல்களில் பக்குவத்தை கொண்டுவரவில்லை.

சினிமா என்பது விஷுவல் வகையிலானது என்பதையும்
கொஞ்சம் மனதில் வைத்திருக்க வேண்டும். அடுத்தடுத்து
பரபரப்பு திருப்பங்களோடு படம் நகர்ந்தாலும் இடைவேளைக்குப்
பிறகு சமுத்திரக்கனியின் நடவடிக்கை புத்திசாலிக் கற்பனை.
வஞ்சனையில்லாத நல்ல மனதுடையவன்
தொண்டன்.

—————————–

-குங்குமம் விமர்சனக்குழு
குங்குமம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: