போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.

 

16, 17ஆம் நூற்றாண்டுகளில் செம்பு, இரும்பு முதலிய
உலோகங்களை விலையுயர்ந்த பொன்னாக மாற்றுவதற்கு
மேல் நாட்டு அறிவியலாளர் சிலர் முயன்றனர்.

அவர்களுக்கு ஆங்கிலத்தில் ஏல்க்கெமிட்ஸ்
(alchemists) என்று பெயர்.

பாதரசம், பலவகை அமிலங்கள் முதலியவற்றைப்
பயன்படுத்தி ஏராளச் சோதனைகளை மேற்கொண்ட அவர்கள்,
குறிக்கோளை எட்டவில்லையாயினும், வேதியியல் என்னும்
அறிவியல் துறை தோன்றவும், வளரவும் காரணகர்த்தா
ஆயினர்.

தமிழகத்திலும் அந்த முயற்சி நடைபெற்றது. அதில்
ஈடுபட்டவர்கள் ரசவாதிகள் என்று அழைக்கப்பட்டனர்.
பொன் செய்யும் மருந்தை கண்டுபிடிக்கமுடியும் என
அவர்கள் நம்பியது போலவே துறவி தாயுமானவரும்
(அவர் ரசவாதியல்ல ஆயினும்) நம்பினார்.

வெந்தழலில் இரதம்வைத்து ஐந்துஉலோகத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்

என்று அவர் பாடியுள்ளார்.

இதன் பொருள் : தழலில் – தீயில். இரதம் வைத்து –
இரசம் வைத்து (அதாவது பாதரசம் பயன்படுத்தி). ஐந்து
உலோகத்தையும் – ஐம்பொன் எனப்படுகிற செம்பு, இரும்பு,
ஈயம், வெள்ளி, (சிறுஅளவில்) தங்கமாகிய ஐந்து
உலோகங்களையும். வேதித்து – வேதியியல் முறைப்படிப்
பொன்னாக மாற்றி. விற்றுண்ணலாம்- விற்றுச் செல்வம்
சேர்க்கலாம்.

சிறிய அளவில் பொன், பெரிய அளவில் மற்ற
உலோகங்கள் சேர்த்து எல்லாவற்றையும் தங்கமாக்க
எண்ணுவது பேராசை அல்லவா?

ரசவாதிகளை நோக்கி யாரோ ஓர் அறிவாளி கூறிய
உபதேசந்தான் இந்தப் பழமொழி.

“பொன் செய்யும் மருந்து தேடிப் படாத பாடுபடுகிறீர்களே!
நீங்கள் வெற்றி பெற்றாலும் உங்கள் பேராசை மேன்மேலும்
பொன் வேண்டும் என்று தூண்டுமாதலால் மன நிறைவு
ஒருக்காலும் ஏற்படாது. போதும் என்ற மனத்தைப்
பெறுங்கள். உள்ளதை வைத்துக்கொண்டு திருப்தியாக
வாழலாம்” என்ற அவரது புத்திமதி ரசவாதிகளுக்கு
மட்டுமல்ல, எல்லாருக்குமே எக்காலத்தும் பொருந்துகிற
பொன்னுரையாகும்.

———————————

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: