பாரீஸ் :
பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் இந்தியாவின் சானியா ஜோடி
முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்தது.
ஆனால் போபண்ணா ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
–
நடால்–ஜோகோவிச்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன்
டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.
4–வது நாளான நேற்று முன்தினம் ஆண்கள் ஒற்றையர்
பிரிவில் 9 முறை சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்)
6–1, 6–4, 6–3 என்ற நேர் செட்டில் நெதர்லாந்தின்
ராபின் ஹாசை தோற்கடித்து 3–வது சுற்றுக்கு
முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச்
(செர்பியா) 6–1, 6–4, 6–3 என்ற செட் கணக்கில்
ஜோவ் சோசாவை (போர்ச்சுகல்) வீழ்த்தினார்.
டொமினிக் திம் (ஆஸ்திரியா), டிமிட்ரோவ் (பல்கேரியா),
மிலோஸ் ராவ்னிக் (கனடா) ஆகியோரும் 3–வது சுற்றை
எட்டினர்.
தரவரிசையில் 91–வது இடம் வகிக்கும் ரென்ஜோ ஆலிவோ
(அர்ஜென்டினா) 7–5, 6–4, 6–7 (6), 6–4 என்ற
செட் கணக்கில் 11–ம் நிலை வீரரான
பிரான்சின் சோங்காவுக்கு அதிர்ச்சி அளித்தார்.
–
தினபூமி
மறுமொழியொன்றை இடுங்கள்