பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம் நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணிஇறைவனுக்கு நாம் பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்
நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி பற்றி
உங்களுக்குத் தெரியுமா?


துவாரகையில் கண்ணன் அரசாண்ட காலம்.

ஒருநாள் கண்ணனைக் காண அவருடைய பால்ய சிநேகிதன்
குசேலர் துவாரகைக்கு வந்தார்.

கண்ணனும் குசேலனும் சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில்
ஒன்றாகக் கல்வி பயின்றவர்கள். குருகுல வாசம் முடிந்ததும்
இருவரும் பிரிந்தனர்.

கண்ணன் துவாரகையின் அரசராக செல்வச் செழிப்புடன்
இருந்தார். ஆனால், அவருடைய தோழன் குசேலரோ
வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தார்.

வறுமைத் துன்பம் நீங்க வழி தெரியாமல் தடுமாறிய குசேலரிடம்
அவருடைய மனைவி, ‘நீங்கள் உங்கள் நண்பரும் துவாரகையின்
அரசருமான கண்ணனை சென்று பார்த்தால், அவர் நம் வறுமைத்
துன்பம் தீர வழி செய்வாரே” என்று கூறினாள்.
ஆனால், நண்பனிடம் சென்று உதவி கேட்க குசேலருக்குத் தயக்கம்.

கடைசியில் வேறு வழி இல்லாமல், மனைவி கூறியபடியே
துவாரகைக்குச் செல்ல முடிவெடுத்தார் குசேலர். ஆனால், பால்ய
சிநேகிதனைப் பார்க்கப் போகும்போது ஏதேனும் கொண்டு செல்ல
வேண்டுமே. எதைக் கொண்டு செல்வது என்று குசேலர் யோசித்துக்
கொண்டிருந்தபோது, அவருடைய மனைவி, ”உங்கள் சிநேகிதருக்கு
மிகவும் பிடித்த அவல் கொஞ்சம் இருக்கிறது. அதை கொண்டு
சென்று உங்கள் சிநேகிதருக்குக் கொடுங்கள்” என்று கூறி,
கொஞ்சம் அவலை எடுத்துக் கொடுத்தாள்.

அவரும் தன் கந்தல் உடையின் ஒரு முனையில் அவலை
முடிந்துகொண்டு நடைப் பயணமாக துவாரகைக்கு சென்றார்.

துவாரகை அரண்மனை வாயிலில் இருந்த காவலர்கள் குசேலரின்
வறுமை நிலையையும் அவருடைய கந்தல் உடையையும் பார்த்து,
அவரை உள்ளே விட மறுத்தனர்.

குசேலர் மிகவும் வற்புறுத்தவே வேறு வழி இல்லாமல் காவலர்கள்
உள்ளே சென்று கண்ணனை வணங்கி, குசேலரின் வருகையைத்
தெரிவித்தனர்.

பால்ய சிநேகிதன் குசேலர் வந்திருக்கிறார் என்ற தகவலைக்
கேட்டதுதான் தாமதம், பரபரப்பாக எழுந்த கண்ணன், காவலர்களுக்கு
முன்பாகச் சென்று குசேலரை கட்டித் தழுவி வரவேற்றார்.

அவரை உள்ளே அழைத்துச் சென்று ருக்மிணியுடன் சேர்ந்து
பாதபூஜை செய்து, விருந்தளித்து உபசரித்தார்.

உபசாரங்கள் முடிந்ததும் கண்ணனும் குசேலரும் ஓய்வாக அமர்ந்து
பேசிக்கொண்டிருந்தனர். அருகில் ருக்மிணி தேவியும் இருந்தார்.

”குசேலா, என்னைக் காண இவ்வளவு தொலைவு வந்த நீ,
எனக்கு எதுவும் கொண்டு வரவில்லையா?” என்று கேட்டார்.

செல்வச் செழிப்புடன் இருக்கும் கண்ணனுக்கு அவலை எப்படித் தருவது
என்று குசேலருக்குத் தயக்கம். ஆனால் கண்ணன் மேலும் மேலும்
கேட்கவே, குசேலர் தான் கொண்டு வந்த அவலை தயக்கத்துடன்
கண்ணனிடம் நீட்டினார்.

கண்ணன் ஒரு பிடி எடுத்து தன் வாயில் போட்டுக்கொண்டார்.
அவ்வளவில், குசேலரின் வீட்டில் அனைத்து செல்வங்களும்
குவிந்துவிட்டன. இரண்டாவது பிடி அவலை எடுத்து வாயில்
போட்டுக்கொண்டார். உடனே குசேலருக்கு மறுமைக்கான பலன்கள்
கிடைத்துவிட்டன.

மூன்றாவது பிடியை கண்ணன் தன் வாயில் போட்டுக்கொள்ளப்
போன நேரம், ருக்மிணி அதைத் தடுத்தாள். அவளுக்குள் ஒரு
தயக்கம். காரணம், கண்ணன் வாமனனாக வந்தபோது ஓரடியால்
விண்ணையும், மறு அடியால் மண்ணையும் அளந்துமுடித்த
நிலையில், மூன்றாவது அடிக்கு மகாபலியையே ஆட்கொண்டு
விட்டானே,

அதேபோல் மூன்றாவது பிடி அவலை உண்டு கண்ணன் எங்கே
குசேலருக்கு ஆட்பட்டு விடுவானோ என்பதுதான்.

ருக்மிணி தடுத்ததற்கான காரணம் பற்றி கண்ணன் கேட்டபோது,
”சுவாமி, தங்களுக்கு அளிக்கப்படும் எதுவும் மகா பிரசாதமாக
ஆகிவிடுகிறது. உங்களுடைய தூய பக்தன் அன்புடன் கொண்டு
வந்த அவல் மொத்தத்தையும் தாங்களே உண்டுவிட்டால் எப்படி?

பிரசாதமாக எனக்கும் கொஞ்சம் தரக்கூடாதா? என்றுதான்
தடுத்தேன்” என்றார். கண்ணன் மீதம் இருந்த அவலை
ருக்மிணிக்குத் தந்தார்.

இந்தச் சம்பவம்தான், பகவானுக்கு நாம் படைக்கும் நைவேத்தியம்
பிரசாதமாக நமக்குக் கிடைப்பதன் பின்னணியில்
அமைந்திருக்கிறது
.-
———————-
-புவனா கண்ணன்
-விகடன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: