இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்


கயிலை நாயகனின் அம்சமாக காலடியில் அவதரித்து,
அனைத்து ஜீவன்களிலும் இருக்கும் பரம்பொருள் ஒன்றே என்னும்
அத்வைத தத்துவத்தை போதித்தவர் ஜகத்குரு ஆதிசங்கரர்.

அவர் சந்நியாசம் மேற்கொள்வதற்கு முன்பாக, தினமும் சில
வீடுகளில் பிக்ஷைக்குச் செல்வது வழக்கம்.

ஆதி சங்கரர்

ஒருநாள் ஆதிசங்கரர் ஒரு பிராமணரின் வீட்டுக்குச் சென்று
பிக்ஷை கேட்டார். அந்த பிராமணரோ வறுமையின் பிடியில்
சிக்கித் தவிப்பவர். ஆதிசங்கரர் அந்த வீட்டுக்குச் சென்றபோது
பிராமணர் வெளியில் சென்றிருந்தார்.

வீட்டில் அவருடைய மனைவி மட்டும் இருந்தாள். வாசலில்
வந்து பிக்ஷை கேட்ட பாலக சங்கரனைப் பார்த்தபோது,
சாட்சாத் சிவபெருமானே பாலகன் வடிவில் வந்து பிக்ஷை
கேட்பது போல் தோன்றியது. பால்வடியும் முகத்துடன்
நின்றிருந்த சங்கரனுக்கு பிக்ஷையிட எதுவும் இல்லையே
என்ற தவிப்புடன் அவள் வீடு முழுவதும் தேடிப் பார்த்தாள்.

அவளுடைய கண்களில் ஒரு தட்டில் உலர்ந்த நெல்லிக்கனி
இருப்பது தென்பட்டது.
பிக்ஷையிடத் தகுதியில்லாத பொருளாக இருந்தாலும்,
அன்பின் மிகுதியால் அந்த நெல்லிக்கனியை எடுத்து வந்து
பாலக சங்கரனின் தட்டில் போட்டாள்.
தன்னுடைய நிலையை நினைத்து வேதனையில் துடித்தாள்.

அந்தப் பெண்மணியின் அன்பில் மகிழ்ந்த சங்கரர்,
அந்தப் பெண்மணியின் வறுமை தீரவேண்டி, மகாலக்ஷ்மியை
பிரார்த்தித்து ஸ்லோகங்களைப் பாடினார்.
அந்த ஸ்லோகங்களே ‘கனகதாரா ஸ்தோத்திரம்’ ஆகும்.

சங்கரரின் பிரார்த்தனைக்கு இரங்கிய மகாலக்ஷ்மி அவருக்கு
தரிசனம் கொடுத்தாள். மகாலக்ஷ்மியை நமஸ்கரித்த சங்கரர்,
தமக்கு நெல்லிக்கனியை பிக்ஷையிட்ட பெண்மணியின்
வறுமை நீங்கச் செய்யவேண்டும் என்று வேண்டினார்.

அதற்கு மகாலக்ஷ்மி, ”சங்கரா, இவர்கள் வறுமையின் பிடியில்
சிக்கித் தவிப்பதற்கு பூர்வஜன்ம வினைதான் காரணம்.
பூர்வ ஜன்மத்தில் இந்தப் பெண் குசேலனின் மனைவியாக
இருந்தவள். இவளுடைய கணவன் குசேலன் கண்ணனின்
அருளால் அளவற்ற செல்வத்தைப் பெற்று வந்தான்.

ஆனால், செல்வம் தந்த செருக்கில் இவர்கள் இருவருமே
அதை முறையான வழிகளில் பயன்படுத்தவில்லை.
மேலும் கண்ணனின் அருளால் பெற்ற செல்வத்தில் ஒரு
சிறிதும் தான தர்ம காரியங்களுக்குப் பயன்படுத்தவில்லை.

அதன் பயனாகவே இந்தப் பிறவியில் இவர்கள் வறுமையை
அனுபவிக்க நேர்ந்தது. இதில் என்னால் ஆவது ஒன்றுமில்லை”
என்றாள்.

கஜலக்‌ஷ்மி

உடனே சங்கரர், ”தேவி, தாங்கள் சொல்வது உண்மையாகத்தான்
இருக்கும். அதை நான் மறுப்பதற்கு இல்லை. ஆனால்,
எப்போது தங்களின் கடைக்கண் பார்வை இந்தப் பெண்ணின்மீது
பட்டுவிட்டதோ, அப்போதே அவர்களின் வினைப்பயன்கள்
தீர்ந்துவிட்டதே.

இனி நீ அவர்களின் வறுமை நீங்க அருள்புரிவதில் தடை
என்ன இருக்கிறது?” என்று கேட்டார்.

சங்கரரின் சமத்காரமான பேச்சில் மகிழ்ந்த மகாலக்ஷ்மி
அந்த வீட்டில் தங்க நெல்லிக்கனிகளாகப் பொழிந்தாள்.

ஆக, இந்த நிகழ்ச்சியின் மூலம் நமக்குக் கிடைக்கக்கூடிய
செல்வங்கள் அனைத்துமே இறைவனின் அருளால்தான்
என்பதை உணர்ந்து, பெற்ற செல்வத்தை முறைப்படி
பயன்படுத்தி, தான தர்மங்கள் செய்தால், எப்பிறவியிலும்
வறுமை நம்மை வாட்டாது.

வறுமை நிலையில் இருப்பவர்கள் தினசரியோ அல்லது
வெள்ளிக்கிழமைகளிலோ ஆதிசங்கரர் அருளிய கனகதாரா
ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால், வறுமை நீங்கி
செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம்.

——————————-
– புவனா கண்ணன்
விகடன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: