–
இந்தியாவில், கரும்பிலிருந்து சர்க்கரை எடுப்பது,
நாம் அனைவரும் அறிந்ததே!
உலகின் சர்க்கரை பாத்திரமென்று அழைக்கப்படும்,
‘கியூபா’வில் பீட்ரூட் கிழங்கிலிருந்து சர்க்கரை
எடுக்கப்படுகிறது.
பிரத்யேக, சர்க்கரை வள்ளிக் கிழங்கு எனும் ரகம் இன்றி,
வெகுகாலமாக, சர்க்கரை விவசாயிகள் அவதியுற்றனர்.
இந்நிலை மாறி, வெள்ளை சர்க்கரைக்காகவே, விவசாயிகள்
மகசூல் செய்து, பயன்பெறத்தக்க கிழங்கு வகையை,
ஆப்பிரிக்காவில், முதலில் அறிமுகம் செய்தவர் பெண்
வேளாண்மை விஞ்ஞானி, பிளாரன்ஸ் வாம்புகு.
கென்யா நாட்டில், நைய்ரி என்னும் இடத்தில், ஆபர்டார்ஸ்
மலையகத்திற்கு அருகே, ஏழைக் குடும்பத்தில்,
ஆகஸ்ட் 23, 1953ல் பிறந்தார். நன்றாக படித்தும், படிப்பை
தொடர முடியாமல், வீட்டின் வறுமை தடுத்தது.
அவரை மேல் படிப்பு படிக்க வைக்க, வாம்புகுவின் தாய்,
இருந்த ஒரு பசுமாட்டை விற்று செலவு செய்தார். ஆனால்,
அந்த தியாகம் வீண் போகவில்லை.
நைரோபி பல்கலைக் கழகத்தில், தாவரவியல் மற்றும்
விலங்கியலில், 1978ல் பட்டப்படிப்பை முடித்த வாம்புகு,
கென்ய விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் இணைந்து
ஆய்வுகளில் இறங்கினார்.
மற்ற ஆப்பிரிக்க விவசாயிகளை போலவே, கிழங்கின்
விளைச்சலை நம்பி இருந்தது இவரது குடும்பம்.
‘இனிப்பு உருளை’ பிரதான உணவாக அங்கே இருந்தது.
முதலில் உணவாகவும், மிஞ்சியது, சர்க்கரை ஆலைகளுக்கும்
சென்றது.
ஆனால், சோதனை என்னவென்றால், பிரதான உணவாக
சர்க்கரை வள்ளிக் கிழங்கு என்றழைக்கப்படும் இனிப்பு
உருளை, பல்வேறு வைரஸ்களின் தாக்குதலுக்கு, எளிதாக
இலக்காகிவிடும் தன்மையுடையது.
அதிலும், சில சமயங்களில், வைரஸ் தாக்குதல்,
விளைச்சலை முழுமையாக தீர்த்து கட்டிவிடும்.
இதை சமாளிக்க, கென்ய அரசு உட்பட, பல அரசு முயற்சி
மேற்கொண்டன. இருந்தும், வைரஸ்களிடமிருந்து
முழுமையாக கிழங்குகளை மீட்க முடியவில்லை.
வேளாண்மை விஞ்ஞானிகள், பலவகையான பூச்சி மருந்தை
மண்ணில் அடித்து பார்த்து அலுத்து போயினர்.
விஞ்ஞானிகளை போலவே, வாம்புகுவும் புராதன முறைகளை
கடைப்பிடித்து, மண்ணில், காற்றில் துாவுவது; தண்ணீரில்
கலந்து அடிப்பது என, முயன்று முயன்று தோற்றார்.
கென்ய வேளாண் ஆய்வுகள் நடத்த, இங்கிலாந்திற்கு
அழைக்கப்பட்டார், வாம்புகு. அப்போது, கென்யா, இங்கிலாந்து
வசமிருந்தது.
ஒருநாள் இரவில், தன் குடும்பத்தை நினைத்தபடி இருந்த
போது, யோசனை ஒன்று உதித்தது. ‘கிழங்கிற்கு வெளியே
விடை இல்லை; வைரஸின் தாக்குதலை தாங்குவதற்கு
கிழங்கின் உள்ளேயே ஏதோ விடை இருக்கிறது’ என
நினைத்தார்.
அதற்கான வழியையும் கண்டுபிடித்து, 1988 முதல்
1991க்குள் ஏழு வகையான வைரஸ் நோய்களிலிருந்து,
சர்க்கரை வள்ளிக் கிழங்கை, மீட்டு, உலக சாதனையாளர்கள்
வரிசையில் சேர்ந்தார், வாம்புகு.
மரபணு முறையில், ‘திசு வாய்ப்பு’ எனும் முறைப்படி,
புதிய சர்க்கரை வள்ளிக் கிழங்கு விதைப்பு நடந்தபோது,
ஆப்பிரிக்காவில் இருந்தே விடை பெற்றது வைரஸ்.
உயிரியல் தொழில்நுட்பத்தின் மூலம், ஆப்ரிக்காவின் பசியை
தீர்க்க முடியும் என்பதை நிரூபித்தார். பசிக்கு மட்டுமல்ல,
விரைவில் சர்க்கரை வள்ளிக் கிழங்கில் இருந்து, சர்க்கரை
தயாரிக்கும் முறையும் அவரால் முழுமை அடைந்தது என்பது
குறிப்பிடத்தக்கது.
கடந்த, 1944, ‘ஹார்வெஸ்ட் பயோடெக் பவுண்டேஷன்
இன்டர்நேஷனல்’ எனும் அமைப்பின் இயக்குனராக, வாம்புகு
நியமிக்கப்பட்டார். சிறு மற்றும் ஏழை விவசாயி களுக்கு
இந்நிறுவனம், கென்யாவில் தொடர்ந்து பலவகை உதவிகள்
செய்து வருகிறது.
புராதன விவசாய முறையும், நவீன தொழில்நுட்பமும்,
சரியான நோக்கத்திற்காக இணைந்தால், எத்தகைய
மறுமலர்ச்சி ஏற்படும் என்பதற்கு, பிளாரன்ஸ் வாம்புகுவின்
பங்களிப்பு ஒரு உதாரணம்.
–
———————————
சிறுவர் மலர்
மறுமொழியொன்றை இடுங்கள்