பாவமும் சாபமும் நீங்கும்! -பெரம்பலூர் மதனகோபால ஸ்வாமி கோயில்

 

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் மிக பிரமாண்டமான தோற்றத்துடன் அமைந்துள்ளது அருள்மிகு மதனகோபால ஸ்வாமி ஆலயம். 9ம் நூற்றாண்டில், சுந்தரபாண்டிய மன்னன் கட்டிய, புராதன் பெருமைகள் கொண்ட கோயில் இது.

இங்கே உள்ள அனுமன் சந்நிதியும் அதன் மேல் அவரின் தந்தை வாயுபகவானின் வாகனமான மானும் இருப்பதும் விசேஷம் என்கின்றனர். வியாக்ரபாதர் மற்றும் பஞ்சபாண்டவர்களுக்கும் இங்கு சந்நிதி உண்டு.

மழை பெய்யவேண்டும் என்று இங்கு உள்ள தும்பிக்கை ஆழ்வார் சிலையைச் சுற்றி, தொட்டி போல் கட்டி, அதில் தண்ணீர் கொண்டு நிரப்பிவைத்து வேண்டுவார்களாம். இந்த வழிபாட்டினால், பல முறை மழை பெய்து உள்ளது என்கின்றனர் பக்தர்கள். 12 ஆழ்வார்களும் பெருமாளை ஸேவித்தபடி சந்நிதி கொண்டிருக்கிறார்கள்.

மலர் மடந்தையும் மண் மடந்தையும் உடனிருக்க மூலவராகவும் உற்ஸவராகவும் காட்சி தரும் பெருமாள் கொள்ளை அழகு. லட்சுமி ஹயக்ரீவர், நரசிம்மர், பாமா ருக்மிணி சமேத வேணுகோபாலர், ஆண்டாள், தன்வந்திரி, சீனிவாசபெருமாள், அலமேலுமங்கைத்  தாயார், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், கோதண்டராமர், கஜலட்சுமி சந்நிதிகளுடன் சரஸ்வதி, கல்யாண விநாயகர் சந்நிதிகளும் தரிசிக்கவேண்டியவை!

மரகதவல்லித் தாயார், தனிச் சந்நிதி கொண்டிருக்கிறார். இவரை வணங்கினால், திருமணத் தடை அகலும்.

புலியின் பாதத்துடன் வந்த வியாக்ரபாத மகரிஷி விமானத்தில் சுதை வடிவிலும், சாபம் நீங்கிய முனிவராக கற்சிலை வடிவில் பிராகாரத்திலும் காட்சியளிக்கிறார். இவரை வழிபட்டால் சாபங்களும் பாவங்களும் நீங்கும் என்கிறார்கள்!

வியாக்ரபாதர் வணங்கி வரம் பெற்ற தலம் என்பதால் வியாக்ரமபுரம், பெரும்புலிவனம், பெரும்புலியூர் என்றெல்லாம் இருந்து, பிறகு பெரம்பலூர் என மருவியதாகச் சொல்வர்.

பிரம்மோற்ஸவம், ராம நவமி, புரட்டாசி சனி, பங்குனி உத்திரம், சித்திரை பிறப்பு, கிருஷ்ண ஜயந்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை, தனுர்மாதம், மாசி மகம், தை மற்றும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மரகதவல்லித் தாயார் உள்புறப்பாடு என விழாக்களுக்கு பஞ்சமே இல்லை, இங்கே! இங்கு வந்து தரிசித்தாலே போதும். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவுகளிடையே ஒற்றுமை ஏற்படும். இல்லத்தில் இனிமை நிறையும்.

மதனகோபால ஸ்வாமிக்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றினால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்!

ர.ரஞ்சிதா   படங்கள்: பா.நாகபிரசன்னா

நன்றி-விகடன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: