* அறிவாளி தடுக்கி விழுந்தால் பலமாகத்தான் விழுவான்.


* ஓர் இளைஞனுக்கு மனைவி ஓர் ஆதாரம்.
கைத்தடி அவனுக்கு ஆடம்பரம்.
ஒரு முதியவருக்கு மனைவி ஓர் ஆடம்பரம்.
கைத்தடி அவருக்கு ஆதாரம்.

* ஆந்தைக்கூட தன் குஞ்சைப் பருந்தாகத்தான்
எண்ணுகிறது.

* ஒவ்வொருவரும் தங்களை அறிவாளி என்று
எண்ணிக்கொள்கிறார்கள்.
அதனால்தான் மிகப்பலர் முட்டாள்களாக இருக்கிறார்கள்.

* அறிவாளி பொன்னான நாட்களையே கணக்கிடுகிறான்.

* அறிவாளி தடுக்கி விழுந்தால் பலமாகத்தான் விழுவான்.

* நரகத்தின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கின்றன,
நள்ளிரவிலும்கூட.

* உன்னை அளவின்றிப் புகழ்கின்றவன் ஏற்கனவே உன்னை
ஏமாற்றிவிட்டான் அல்லது இனி ஏமாற்ற விரும்புகிறான்.

* ஆண்டவன் ஒரு கையால் நம்மை அடிக்கிறான்.
மற்ற கரங்களால் அணைக்கிறான்.

* செத்த சிங்கத்தை கழுதைகூட உதைக்கும்.

* உன் கௌரவம் உனது நாக்கில் உள்ளது.

* தாயைப் பார்த்து மகளை மணம் செய்.

* கணவன் தலைவன், மனைவி அவன் தலையிலிருக்கும் மகுடம்.

* பொறாமைக்காரன் துக்கப்படுவதால் ஒன்று அவன்
தொல்லைகளில் இருக்க வேண்டும்,
அல்லது யாரோ சிலர் அதிர்ஷ்டம் அடைந்திருக்க வேண்டும்.

* வழியைத் தவற விடுவதைவிடப் பாதி வழியில் திரும்பிவிடுவது மேல்.

* நஞ்சு விற்பவன் அழகிய விளம்பரப் பலகையைப் பெற்றிருக்கிறான்.

* மின்னலால் தாக்குண்டவன் இடியோசையைக் கேட்கமாட்டான்.

———————————-ஹங்கேரி பழமொழிகள்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: