பட்டமும் நூலும் – அமர்க்களம்


குட்டிப் பையன் விட்ட பட்டம்
கோட்டை மேலே பறக்குது – அது
குட்டிக் கரணம் போட்டு விட்டுக்
கோல வானில் மிதக்குது!

சுட்டிப் பையன் விட்ட பட்டம்
சுழன்று வானை அளக்குது – அது
சூறைக் காற்று வீசும்போதும்
சோர்ந்திடாமல் கலக்குது!

ஒட்டி விட்ட நூலும் எந்தன்
கையை மேலே இழுக்குது – அதில்
கட்டுப்பட்ட பட்டம் முட்டிக்
காற்றை வெட்டிக் கிழிக்குது!

வாலில்லாமல் விட்ட பட்டம்
வானம் ஏறிப் போகுமா? – வீட்டில்
வால் தனங்கள் செய்த போதும்
வாழ்வில் பட்டம் வாங்கலாம்!

விலை மிகுந்த பட்டத்திற்கும்
நிறங்கள் இல்லை விண்ணிலே-கற்று
நிலையுயர்ந்த மாந்தருக்கும்
நிறங்கள் ஏது மண்ணிலே?

நூலறுந்த பட்டம் மண்ணில்
நொடியில் வீழ்ந்து போகுமே – யாரும்
நூறு பட்டம் பெற்ற பின்னும்
நூல் மறந்தால் சோகமே!

———————-
– ஆத்தூர் சுந்தரம்
நன்றி: தி இந்து

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: