மஹாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன்களின் தற்போதைய நிலை தெரியுமா..?

மஹாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன்களான
அனுராங் ஜெயின் மற்றும் தரங் ஜெயின் இருவரும்
தங்கள் குடும்பத் தொழிலான மோட்டார் சைக்கிள்
தொழிலில் சாதித்து தற்போது டாப் பணக்காரர்கள்
பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

மஹாத்மா காந்தியின் ஐந்தாவது மகனாகக் கருதப்படுபவர்
ஜமன்லால் பஜாஜ். பஜாஜ் மோட்டர் நிறுவனங்களின்
நிறுவனரான இவரது மகள் வழி கொள்ளுப் பேரன்களான
அனுராங் ஜெயின் மற்றும் தரங் ஜெயின் இன்று அதே
தொழிலில் சிறந்து விளங்கி வருகின்றனர்.

உலகின் டாப்- 500 பணக்காரர்களின் பட்டியலில் சகோதரர்கள்
இருவரும் இடம்பெற்றுள்ளனர். இரட்டையர்களான இந்தச்
சகோதரர்கள் மோட்டார் வாகனங்களுக்கான உதிரிப் பாகங்கள்
தயாரித்துத் தரும் தொழிற்கூடத்தைச் செயல்படுத்தி
வருகின்றனர்.

‘எண்ட்யூரன்ஸ்’ மற்றும் ‘வார்ரோக்’ ஆகிய இரண்டு
நிறுவனங்களையும் சிறப்புற நடத்தி வரும் இந்த இரட்டைச்
சகோதரர்கள் தங்களின் முதல் வாடிக்கையாளராகத் தங்கள்
மாமாவின் நிறுவனமான ‘பஜாஜ்’ நிறுவனத்தையே நம்பி
இத்தொழிலில் களம் இறங்கியுள்ளனர்.

தொடர் முயற்சியால் வளர்ந்த இவர்கள் தற்போது தங்கள்
மாமாவின் துணை இல்லாமலேயே சிறப்பாகச் செயல்பட்டு
வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

இச்சகோதரர்களின் தொழில் நிறுவனங்களான ‘வார்ரோக்’
அவுரங்காபாத்தினைத் தலைமையகமாகக்கொண்டு செயல்பட்டு
வருகிறது. இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 1.5 பில்லியன்
டாலர்களாகும்.

மற்றொரு நிறுவனமான ‘எண்ட்யூரன்ஸ்’ ஆண்டுக்கு இந்திய
மதிப்பின்படி 55.7 பில்லியன் வருமானம் ஈட்டியுள்ளது
குறிப்பிடத்தக்கது.

———————————-
ராகினி ஆத்ம வெண்டி மு.
விகடன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: