பேட்டியில் குழப்புவது…(தென்கச்சி கோ.சுவாமிநாதன்

மார்க் ட்வைன் உங்களுக்கு தெரியும். புகழ்பெற்ற நகைச்சுவை
எழுத்தாளர். ஒரு நாள் ஒரு பத்திரிகை நிருபர் அவரை பேட்டி
காணவந்தார்.

அந்த எழுத்தாளருக்கு பேட்டி என்றால் பிடிக்காது. எதையாவது
சொல்லி தப்பித்து விடுவார். ஆனால் அவரை தேடி வந்த
பத்திரிகை நிருபர் அவரை விட கில்லாடி. விடாக்கண்டன்.
எதையாவது பேசி எப்படியாவது ஆசாமிகளை கெட்டியாக
பிடித்து கொள்வார்.

வேறு வழியில்லாமல் மார்க் ட்வைன் இவரிடம் வசமாக
மாட்டிக்கொண்டார். தப்பிக்க வழியில்லை. வேறு என்ன
செய்யலாம்? குழப்புவது தான் சரியான வழி என்று
மனதுக்குள் முடிவு செய்து கொண்டார்.


சரி.. கேளுங்கள்…சொல்கிறேன். என்று அவர் முன்னால்
உட்கார்ந்தார். பத்திரிகை நிருபர் மெல்ல ஆரம்பித்தார்.

ஏன் சார்…. உங்களுக்கு சொந்தக்காரங்கன்னு யாராவது
இருக்காங்களா?

என்ன கேக்கறீங்க…?

உதாரணத்துக்கு ஒரு சகோதரர்…?

ஆமாம்… ஆமாம்… ஒருத்தன் இருந்தான் என்று கூறி
பெருமூச்சு விட்டார் எழுத்தாளர். நிருபர் அவரை கூர்ந்து
கவனித்தார்.

ஏன் சார்… ஏதாவது கெட்ட செய்தியா…?

ஆமாம் அது ஒரு துயரம்

ஏங்க…. என்ன ஆச்சு அவருக்கு?

அதை ஏன் கேக்கறீங்க… அது ஒரு சோக கதை
அப்படின்னா…?
அவன் செத்துட்டான்..!

ஐயோ பாவம்…எப்படிச் செத்தார்?


அது தானே இன்னமும் எங்களுக்கு நிச்சயமாக தெரியலே…

என்ன சொல்றீங்க… எப்படி இறந்தார்ன்னு தெரியலையா…?

அப்படி இல்லே.. எங்களுக்கு சந்தேகம் என்ன… ன்னா
அவர் இறந்துட்டாரா… அப்படிங்கறது தான்.


அப்படின்னா அவர் எங்காவது மறைஞ்சுட்டாரா….
அல்லது அவரை இழந்துட்டீங்களா?

அப்படியும் அதை தீர்மானமாச் சொல்ல முடியாது. ஒரு
வேளை அப்படியும் இருக்கலாம். ஏன்னா மரணம்ங்கறதும்
ஒரு“ இழப்பு தானே… அந்த வகையிலே பார்த்தா
அது மரணம் தானே

நிருபர் குழம்பினார். இருந்தாலும் இன்னும் கொஞ்சம்
தெளிவு பாக்கி இருந்து அவரிடம் ஆகவே தொடர்ந்து
கேட்டார்.


நீங்க என்ன சொல்றீங்க..? அவர் இறந்து போனதே
நிச்சயமில்லலேங்கறீங்களா?

சரி.. அவ்வளவு தூரத்துக்கு ஏன்… நடந்தது என்னங்கறதை
விவரமாவே சொல்லிப்புடறேன் கேட்டுக்குங்களேன்.

நிருபர் நம்பிக்கை யோடு நிமிர்ந்து உட்கார்ந்தார். கையில்
இருந்த குறிப்பு புத்தகமும் பென்சிலும் சுறுசுறுப்பாக இயங்க
காத்திருந்தன. அவுர் சொல்ல ஆரம்பித்தார்.

நாங்க ரெண்டுபேர்… இரண்டு பேரும் இரட்டை குழந்தைகள்
ஒருத்தர் பெயர் பில் இன்னொருத்தர் பெயர் ட்வைன்
ஒரு நாள் குளித்து கொண்டிருக்கும்போது அந்த விபத்து
நடந்தது. சின்னப்பையன் தொட்டியிலே மூழ்கி விட்டான்.

ஓ… அப்படியா? இப்பத்தான் எனக்கு புரியுது…
உங்க சகோதரர் குழந்தையா இருக்கும்போதே
செத்துட்டார்ங்கறீங்க..


அப்படியும் சொல்ல முடியாது


என்ன சொல்றீங்க?
நாங்க இரட்டை குழந்தைங்க… எங்களில் யாரோ ஒருத்தர்
தண்ணீரில் மூழ்கிவிட்டார். அது மார்க் ட்வைனா….
அல்லது பில்லாங்கறது நிச்சயமாத் தெரியாது.

அப்படின்னா?

அதுதான் ஆரம்பத்துலேயே சொன்னேன்..
பில் இறந்து விட்டது சந்தேகம்..ன்னு


பேட்டி காண வந்த நிருபர் பேய் அறைந்தது போல்
அதிர்ச்சிகுள்ளாகி.. உடனே அந்த இடத்தை விட்டு எழுந்து
ஓடிப்போனாராம்.
அதன்பிறகு அவர் பத்திரிகை தொழிலுக்கே முழுக்கு போட்டு
விட்டதாக கேள்வி.

———————————

-தென்கச்சி கோ.சுவாமிநாதன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: