சொல்வதென்றால் வெட்கமடி தோழி …


# பாவேந்தர்

—————————

சொல்வதென்றால் வெட்கமடி தோழி – சொல்லச்
சொல்லுகின்றாய் என்துணைவன்
சொன்னதையும் செய்ததையும்
{சொல்வதென்றால்…}

முல்லைவிலை என்ன என்றான்.
இல்லைஎன்று நான்சிரித்தேன்
பல்லைஇதோ என்று காட்டிப்
பத்துமுத்தம் வைத்து நின்றான்.
{சொல்வதென்றால்…}

பின்னலைப்பின்னே கரும்பாம்பென்றான் – உடன்
பேதைதுடித்தேன் அணைத்துநின்றான்
கன்னல்என்றான் கனியிதழைக்
காதல்மருந் தென்றுதின்றான்.
{சொல்வதென்றால்…}

நிறையிருட்டில் ஒருபுதிரைப் போட்டான்;
நிலவெறிப்ப தென்னவென்று கேட்டான்.
குறைமதியும் இல்லைஎன்றேன்.
குளிர்முகத்தில் முகம்அணைத்தான்.
{சொல்வதென்றால்…}


இசை : பாடல் : பாரதிதாசன்
குரல்கள் : நித்யஸ்ரீ மகாதேவன் வருடம் : —-
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: