இனிமையான முதுமை

 

அக்டோபர் முதல் தேதி உலக முதியோர் தினம்.
முதியோர் மருத்துவச் சேவைக்காக தேசிய விருதைப்
பெற்ற டாக்டர் வி.எஸ்.நடராஜன் அவர்கள் முதுமையில்
ஆரோக்கியமாக இருப்பதற்காகக் கூறும் சில வழிகள் :

முதுமையின் விரோதி தனிமை.
எப்பாடு பட்டாவது அதைத் தவிர்க்க வேண்டும்.
அவரவருக்கு நாட்டமான பொழுதுபோக்கில் ஈடுபட
வேண்டும்.

புத்தகம் படிப்பது, ஆன்மிகம், தோட்டக்கலை, கணிப்பொறி
பயிற்சி பெறுவது போன்றவற்றில் ஈடுபடலாம்.
தன்னுடைய தேவைகளை தாமே செய்யப் பழகிக்
கொள்ளவும் வேண்டும். மனத்தளவில் பந்த பாசங்களைக்
குறைத்துக் கொண்டு பற்றற்ற வாழ்வு வாழ வேண்டும்.

மன அமைதி, சகிப்புத்தன்மை இவை கிட்ட தியானம்,
பிராணாயாமம் போன்றவற்றில் ஈடுபடலாம். சுமார்
5 முதல் 20 நிமிடம் வரை மவுனம் கடைப்பிடித்தல்
மன அமைதி பெற ஒரு சிறந்த வழிமுறையாகும்.

வாரம் ஒரு முறை விரதம் இருக்கவேண்டும்.
குறைந்த கலோரிச் சத்துள்ள உணவு வகைகளை சாப்பிடுதல்
வேண்டும். கோதுமை,ராகி, பால், கீரை, பச்சைக் காய்கறிகள்
இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

குடும்பத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளை தவிர்த்து கூடிய
வரை உதவியாக இருக்க வேண்டும். வாரிசுகளுக்கு பயன்
தரும் வகையில், தேவையில்லாத வழக்குகளைத் தவிர்க்க
உயில் எழுதுவது அவசியம்.
கால முறைப்படி தவறாமல் மருத்துவ பரிசோதனை
மேற்கொள்ள வேண்டும்.

நடுத்தர வயதிலிருந்தே முதுமைக் காலத்திற்காக சேமிப்பை
ஏற்படுத்திக் கொள்ளுதல் அவசியம். அவசியமான உறவுகளை
வெட்டி விடாமல், நல்ல நண்பர்களை மறக்காமல் தொடர்புடன்
இருப்பது சமயத்தில் கரம் கொடுக்கும்.

சக்திகேற்ற உழைப்பும், உழைப்புக்கேற்ற ஓய்வும் வேண்டும்.
முடிந்த அளவு சுற்றுலா சென்று வருதல் வேண்டும்.

———————————–

(நன்றி : ” 60 வயதுக்குப் பிறகு” – டாக்டர் வி.எஸ். நடராஜன் அவர்கள்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: