சின்னச் சின்ன சந்தோசம்தாங்க வாழ்க்கையே!

 

Image result for தவணைக் கறி - கவிதை
பொதுவாகவே! மனித வாழ்க்கையில் சந்தோசமும் துக்கமும்
நிறைந்திருக்கும், சந்தோஷம் வரும்போது சிரித்தும்,
துக்கங்கள் வரும்போது அழுதும் நமது உணர்வுகளை வெளிப்
படுத்துவோம்.

சிலருடைய வாழ்க்கை எப்போதும் சந்தோஷமாகவே இருக்கும்,
சிலருடைய வாழ்க்கை எப்பொழுதும் சங்கடமாகவே இருக்கும்.

” சந்தோஷம் வந்தால் நீயே சிரித்து மகிழ்!
துக்கம் வந்தால் என்னிடமும் பகிர்ந்துக்கொள்!” ”

எங்கேயோ படித்தது இப்போது ஞாபகம்
வருகிறது. மனிதன்தான் மனிதனின் உணர்வுகளைப்
புரிந்துக்கொள்ளமுடியும். மனிதன்தான் மனிதனுக்கு உதவ
முடியும். என்ற எண்ணம் எப்போதும் வேண்டும்.

காதல், கவர்ச்சி, காமம், சபலம் இவைகள் எல்லாம்
மனிதர்களின் மனதில் புதைந்து கிடக்கும் ஏக்கங்கள்.
இவற்றை எல்லோரும் எப்போதும் வெளிபடுத்துவதில்லை.
வெளிபடுத்தவும் கூடாது. இவைகள் எல்லாம் எப்பொழுதும்
இலைமறைகாயாகவே இருக்கவேண்டும்.

பணம், படிப்பு இவற்றை எப்போதும் தேடிக்கொண்டே
இருக்க வேண்டும், இவற்றின் தேடல் குறையும்போது நமது
வளர்ச்சியும் குறைந்துவிடும். ஆசையை எப்பொழுதும் அடக்கி
ஆளவேண்டும். அப்போதுதான் நிம்மதியான வாழ்க்கையை
வாழமுடியும்.

உலகில் எத்தினையோ சாதிகள், மதங்கள் இருக்கிறது.
ஆனால் பணம் என்கிற பவருக்கு முன்னால் இரண்டே சதிதான்,
இரண்டே மதம்தான். ஒன்னு இருப்பவன், இரண்டாவது
இல்லாதவன்.

பணக்காரர்களைப் பார்த்து ஏழைகள் பொறாமை படுவார்கள்
இது இயல்புதான் அதேநேரம் ஏழைகளைப் பார்த்து பொறாமைப்படும்
பணக்காரர்களும் இவ்வுலகில் இருக்கிறார்கள் என்பதும் உண்மை.
இவர்களிடம் உள்ளவைகள் அவர்களிடம் இல்லை,

அவர்களிடம் உள்ளவைகள் இவர்களிடம் இல்லை, இதைதான்
இருப்பவன் இல்லாதவனை பார்த்து பொறாமைப்படுகிறான்
என்று சொன்னேன்.

மனித வாழ்க்கையில் சந்தோஷத்திற்கு சாதி, மதம்,
பணம் காசு, இருப்பவன் இல்லாதவன் என்ற இனப்பிரிவினைகள்
கிடையாது. எல்லோருக்கும் சந்தோஷம் கொடுக்கும் விஷயங்கள்
நம் முன்னாடியே கொட்டிக் கிடக்கிறது, நாம் இதை விட்டுவிட்டு
எங்க எங்கேயோ தேடிக்கொண்டு அலைகிறோம்.

சந்தோஷத்திற்கான மந்திர வார்த்தைகள் சில
வாழ்த்துகள், நன்றி, நல்லாருக்கு, கலக்கல், அருமை இப்படிப்பட்ட
சாதாரண வாரத்தைகளே போதுமானது.
உதாரணம்:-

சாதரணமா அம்மாவோ அல்லது சகோதரிகளோ, அல்லது
மனைவியோ கஷ்டப்பட்டு சமையல் செய்வாங்க, நாம அதில்
ஏதாவது குறை இருந்தால் கண்டிபிடித்து என்ன இது ச்சே!
இதெல்லாம் சமையலா என்று சொல்வோம். இப்படி குறைகளை
மட்டுமே கண்டுபிடித்து பேசுவது வாழ்க்கை இல்லைங்க,
அதன் நிறைகளை பேசுவதுதான் வாழ்க்கையே!

அம்மா சமையல் அருமை!
அக்கா சமையல் நல்லாருக்கு!
வாவ்! சமையல் கலக்கல், சூப்பர் என்று சொல்லிப்பாருங்க..
அன்னைக்கு முழுவதும் அவங்க சந்தோஷமா இருப்பாங்க,
அவங்க மட்டும் இல்லை குடும்பத்தையே அன்றைய நாள்
முழுவதும் சந்தோஷமா பார்த்துகொள்வார்கள்.

இப்படியே ஒரு சின்ன சிரிப்புடன் வீடு, அலுவலகம்,
உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் பேசிப்பாருங்க
வாழ்க்கை சுகமா இனிக்கும்.

வாழ்க்கையை புரிஞ்சிக்கோங்க நம் மனசுக்கு
பிடித்தவர்களிடம் மனம் விட்டு பேசுங்க, எதற்கும் கோபப்படாதிங்க
சிரிச்சிகிட்டே பேசுங்க, எல்லாமே சொல்ல நல்லாருக்கும்
பின்பற்றுவதுதான் கஷ்டம் என்று சொல்கிறீர்களா?

முடியுங்க ஒருநாள் முயற்சி செய்து பாருங்களேன்.

” குறைகளை மறப்போம், நிறைகளை நினைவில் கொள்வோம்,
வாழ்க்கையை அழகாக சுவாசிப்போம்.”

——————————-
semmalai akash
http://semmalai.blogspot.sg

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: