இசை அரசியின் இக்கட்டைப் போக்கிய பரமாசார்யா!

மகாபெரியவாளோட பரமபக்தர்கள்ல ஒருத்தர்,
எம்.எஸ். சுப்புலட்சுமி.
பரமாசார்யாளை தரிசிக்க அவா வந்தா, அன்னிக்க நிச்சயம்
கானமழை கேட்கும். தன்னை மறந்து அவா பாடறதை,
ஆனந்தமா ரசிப்பார் ஆசார்யா.

ஒருநாள், பரமாச்சார்யாளை தரிசனம் பண்ண வந்தா
எம்.எஸ். கொண்டு வந்திருந்த பழத்தட்டை மகா பெரியவா
முன்னால வைச்சுட்டு, நமஸ்காரம் பண்ணினா,

‘பெரியவா, பாரத தேசத்தோட சார்புல ஐ.நா. சபையில
சங்கீதக் கச்சேரி ஒண்ணு பண்ணறதுக்காக என்னை
அழைச்சிருக்கா, உஙக உத்தரவைக் கேட்டுண்டு பதில்
சொல்றதா சொல்லியிருக்கேன்’ பவ்யமா சொன்னா.

மெல்லிசான புன்னகையோட ஆசிர்வாதம் பண்றாப்புல
கையை உசத்தின ஆசார்யா, ‘ரொம்ப நல்லது. இது உனக்க
மட்டுமான கௌரவம் இல்லை. நம்ம தேசத்தோட
கௌரவத்துக்கானது. அதனால கண்டிப்பா போய்ட்டுவா?’
அப்படின்னு சொன்னதோட, ‘ஒரு பாட்டு எழுதித் தரேன்.
அதை அவஸ்யம் அங்கே பாடு’ன்னு சொல்லிட்டு பாட்டை
எழுதிக் குடுத்தார்.

லோக மக்கள் சண்டை சச்சரவு இல்லாம ஒருத்தருக்கு
ஒருத்தர் ஒத்தாசையா இருக்கணும்கற அர்தத்துல அமைஞ்ச
அந்த பாட்டு, மைத்ரீம் பஜதன்ன தொடங்கினதால,
அதுக்கு அந்தப் பேரையே வைச்சார்.

பரமாச்சார்யாளோட ஆசிர்வாதமே பெரிய சந்தோஷம்.
அதைவிடப பெருசா, அவரே ஒரு பாட்டை எழுதிக் கொடுத்து
அதை அவஸ்யம் பாடுனு சொல்றார்னா, அந்த சந்தோஷத்தை
எப்படிச் சொல்றது? புளகாங்கிதத்துல கண்லேர்ந்து ஆனந்த
பாஷ்யம் சொரிய அந்தப் பாட்டை வாங்கி பத்திரப்படுத்திண்டு
புறப்பட்டா எம்.எஸ்.

ஆச்சு. குறிப்பிட்ட நாள்ல குறிச்ச நேரத்துல ஐ.நா சபையில
பாடறதுக்காக போய் இறங்கினா எம்.எஸ்.
சரியா அதே நேரத்துல தடங்கல் மாதிரி ஒரு லாக் ஏற்பட்டது.
ஏரோப்ளேன்ல போய் இறங்கறவாளுக்கு ஜெட்லாக்னு
ஒரு பிரச்னை ஏற்படும்னு சொல்வா, அந்தமாதிரி ஏதாவது
ஏற்பட்டிருந்தா பரவாயில்லை. சமாளிச்சுண்டுடலாம்.

இவளாளுக்கு ஏற்பட்டது த்ரோட் லாக். ஆமாம் காற்றினிலே
வரும் கீதம்னு பாடினவாளோட வாய்ஸ்ல வெறும் காத்து
மட்டும் வர்ற மாதிரி தொண்டை அடைச்சுண்டுடுத்து.

ஐ.நா சபையில பாடறதுக்கு இன்னும் ரெண்டு, மூணு மணி
நேரம்தான் இருக்குங்கற சூழ்நிலையில என்ன செய்யறதுன்னே
தெரியலை அவாளுக்கு. கூடப் போயிருந்த இசைக் கலைஞர்கள்
எல்லாம் தெரிஞ்ச கைவைத்தியத்தை செஞ்சு பார்த்தா, ஊஹூம்
எதுவும் கைகொடுக்கலை.

அழறதுக்குக்கூட முடியாம அப்படியே வாயடைச்சு பரிதவிச்சு
நின்னுண்டு இருந்த சமயத்துல அவாளுக்கு பரமாச்சார்யாளோட
ஞாபகம் வந்திருக்கு. இது உனக்கான கவுரம் இல்லை.
பாரத தேசத்க்கானது கண்டிப்பா நீ பாடணும்னு சொல்லி ஒரு
பாட்டையும் எழுதிக் கொடுத்த அந்த மகானோட வாக்கு ஒரு
போதும் பொய்க்காது. கண்டிப்பா அவர் காப்பாத்துவார்னு ஒரு
நம்பிக்கை மனசுக்குள்ளே தோணித்து,

உடனே என்ன ஆனாலும் பார்த்துக்கலாம்னு தங்கியிருந்த
ஜாகையிலேர்ந்து ப்ரோக்ராம் நடக்கப்போற இடத்துக்கு
கிளம்பிட்டா.

ஐ.நா. சபை கூடத்துல அவா போய் உட்கார்ந்ததும், சபையே
நிசப்தமாச்சு. தம்புராவோட ஸ்ருதி மெதுவா ரீங்காரமிட
ஆரம்பிச்சுது. ‘கண்ணை இருக்க மூடிண்டு, கையைக் கூப்பிண்டு,
இக்கட்டு, இக்கட்டு பண்ணாம நீங்கதான் காப்பாத்தணும்!
ஆச்சார்யாளே, நீஙக விட்ட வழி’ன்னு நினைச்சுண்டு மெதுவா
வாயைத் திறந்தா இசையரசி,

வழக்கதக்தை விடவும் ரொம்பவே இனிமையான கானம்
மழையா பொழிய ஆரம்பிச்சுது.

தாளம், லயம், பாவம் எல்லாம் கைகோர்த்துக்க, சப்த வைரமும்
ஸ்ருதி தவறாம சங்கிலியா இணைஞ்சு சங்கீதமா ஒலிச்சுது.
நிகழ்ச்சியோட நிறைவா, மகாபெரியவா எழுதிக் கொடுத்த
மைத்ரீம் பஜத பாடலைப் பாடி முடிச்சா,

அவ்வளவு நேரமும் அந்த கானசாகரதக்துல ஐக்கியமாகி
இருந்த ஐக்கிய நாடுகள் சபையோட உறுப்பினர்கள் எல்லாரும்
எழுந்து நின்னு கைதட்டி ஆரவாரம் பண்ணினா.

கண்ணுல நீர்க் கசிய எழுந்து நின்ன எம்.எஸ். மனசுக்குள்ளே,
‘ஆசார்யாளே, அத்தனை பெருமைக்கும் காரணம் நீங்கதான்!
ஒலிச்சது என்னோட குரல் இல்லை. கடவுளான உங்க
அனுக்கிரகத்தால வந்த குரல் இது’ன்னு நினைச்சுண்டு நெகிழ்ந்து
நின்னா.

அங்கேர்ந்து திரும்பி வந்ததும், பரமாசார்யாளை தரிசனம் பண்ண
வந்தா, அவா எதுவும் சொல்றதுக்கு முன்னலேயே ‘என்ன,
பாடமுடியாதபடிக்கு தொண்டை சண்டை போட்டுதாக்கும்!
இருந்தாலும் சமாளி்ச்சு பாடிட்டே போல இருக்கு!

சந்த்ர மௌலீச்வரரோட க்ருபை உனக்கு எப்பவும் உண்டு’
அப்படின்னு சொல்லி ஆசிர்வதிச்சார் ஆசார்யா!

‘இந்த லோகத்துல எந்த மூலைல என்னோட பக்தர்களுக்கு
என்ன நடந்தாலும் எனக்குத் தெரியும். அவாளை நான் இருந்த
இடத்துலேர்ந்தே காப்பாத்துவேன்’னு சொல்லாமலே உணர்த்திட்ட
மகாபெரியவா அந்த மகேஸ்வரனாகவே தெரிஞ்சார் எல்லாரோட
கண்ணுக்கும்.

—————————–

– என் அக்ஷிதா
குமுதம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: