தேடல் முக்கியம் – ஹைகூ

Image result for தேடல்

 

தேடல் என்றால் பொருள் தேடல் அன்று
அறிவுத் தேடல் மிக முக்கியம் .
அறிவுத் தேடல் மூச்சு உள்ளவரை தொடர வேண்டும்

——————————–

சூரியன் அலைந்து கொண்டிருக்கிறான்
எரிக்கும் தன் அனலை
இறக்கி வைக்க இடம் தேடி !

——————————

இருண்மையை ஒழிக்க வந்த
இருட்டுத் தீபம் நம்
மக்களாட்சி !

—————————-

நாளாறு காலமும் தொழுது
கோளறு பதிகம் பாடிப்
பல பெற்றான் கோளாறு !

————————

குளித்துக் குளித்து
அழுக்குப் போகவில்லை மலைக்கு
ஒய்ந்தது மழை !

————————-

ஒளிரத் தோடங்கிய நிலா
ஒழியத் தொடங்கியது
சூரியனக் கண்டதும் !

————————–

எரியவில்லை
வாழ்க்கை விளக்கு
எரிகிறது வயிறு !

————————

காடு நமைத்தேடும் வரை
பூமி நமை மூடும் வரை
தேடுவோம் அறிவுச் செல்வம் !

————————–

நன்றி:
நறுக்குகள் நூறு ! -தொகுப்பிலிருந்து
நூல் ஆசிரியர் கவிஞர் விழிகள் தி .நடராசன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !-
—————–

படம்-இணையம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: