‘டாஸ்மாக்’ கடைக்கு எதிராக 7 வயது சிறுவன் போராட்டம்


சென்னை:
சென்னையில், ஆகாஷ் என்ற, ஏழு வயது சிறுவன்,
‘டாஸ்மாக்’ கடைகளை மூட வலியுறுத்தி, அறவழி
போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளான்.

காஞ்சிபுரம் மாவட்டம், படூர் கிராமத்தில் திறக்கப்பட்டுள்ள,
டாஸ்மாக் கடையை மூடக் கோரி நாளை அறவழி
போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அந்த சிறுவன்
தெரிவித்தான்.

ஆகாஷ் கூறியதாவது: நான், மூன்றாம் வகுப்பு படிக்கிறேன்.
எங்கள் ஊரான படூரில் ஏப்., மாதம் ஒரு மதுக்கடையை
திறந்தனர். அதை மூட வலியுறுத்தி, சாலையில் படிக்கும்
போராட்டத்தை நடத்தினேன்.

தொடர்ந்து, கலெக்டரிடமும் கோரிக்கை வைத்தேன்;
அவர், அக்கடையை மூடுவதாக உறுதி அளித்தார்.

இரண்டு நாட்கள் மட்டுமே, அக்கடை மூடப்பட்டது;
மீண்டும் திறந்து விட்டனர். தற்போது, 15 நாட்கள் கடந்த
நிலையில், மீண்டும் என் போராட்டத்தை துவக்கி உள்ளேன்.

யாருக்கும் பாதிப்பு ஏற்படாத காந்திய வழியில் போராட
உள்ளேன். அதன்படி, சாலையில் படிக்கும் போராட்டதையும்,
தொடர்ந்து, 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் இணைந்து,
மனித சங்கிலி போராட்டத்திலும் ஈடுபட உள்ளேன்.

இங்கு குழந்தைகள், சாக்லெட்டுக்கு அடிமையாவதை போல,
பெரியவர்கள், மதுவுக்கு அடிமையாகி உள்ளனர். குழந்தைகள்,
சாக்லெட்டுக்காக எதையும் செய்வர். அதைப் போல,
மதுப்பிரியர்கள், மதுவுக்காக எதையும் செய்கின்றனர்.

அதனால், மதுக்கடைகளை மூடும் வரை போராடுவேன்.இவ்வாறு
ஆகாஷ் கூறினான்.ஆகாஷின் தம்பி ஆதர்ஷ் என்ற, நான்கு வயது
சிறுவனும் உடன் இருந்தான்.

—————————-

_________________
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: