க்ளோனிங்… க்ளோனிங்…

கடந்த, 1822ல், செக்கஸ்லோவேக்கியா வின் ப்ரூனோவில்
பிறந்த, க்ரிகர் மெண்டல், சின்ன வயதிலேயே வறுமை
காரணமாக சர்ச்சில் பாதிரியாராகக் கல்வி கற்க அனுப்பப்
பட்டார்.

இவரது ஆர்வமெல்லாம் விலங்குகளின் பிறப்பு, வளர்ப்பு,
தாவரங்களின் தோற்றம் போன்றவற்றில் லயித்திருந்தது.
ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் அவர் வெற்றி பெறவில்லை.

இருந்தாலும் தகுதி பெறாத ஆசிரியராக இயற்பியலும்,
இயற்கை விஞ்ஞானமும் நடத்தும் ஆசிரியராக, உயர்நிலைப்
பள்ளியில் சேர்த்துக் கொண்டனர்.

பட்டாணித் தாவரங்களை, மாற்று இனப்பெருக்கம் செய்து பார்த்து,
தன் ஆராய்ச்சிகளை தொடர்ந்தார். உயரம், தோற்றம், நெளிவு
போன்ற பரம்பரை குணங் களை ஆராய்ந்த அவர்,
‘ஜீன்’களின் ரகசியத்தைக் கண்டு வெளியிட்டார்.

இவர் பணியாற்றிய வேலை முழுவதும் வீண் என்றது தேவாலயம்.
ஒரு தோட்டக்காரனுக்கு கிடைத்த மரியாதை கூட இவருக்கு
கிடைக்கவில்லை.

தாவர மாற்று இனப்பெருக்கம் பற்றி, பிப்., 8, 1865ல் தேவாலய
உயர்மட்ட அறிவுஜீவிகளின் கூட்டத்தில், தன் கட்டுரையை அவர்
வாசித்தபோது, பலரும் முகம் சுளித்தனர். ‘எட்டு ஆண்டுகள்,
பட்டாணியோடு, ச்சே… எவ்வளவு பெரிய வீண்’ என்ற கேலிச்
சொற்கள் அவரது காதில் விழுந்தது.

எலி போன்ற விலங்குகளில் தன் ஆராய்ச்சியை அவர் தொடர
நினைத்த போது, ‘தேவாலயம் ஒன்றும் எலி வளையல்ல…
இந்த ஆராய்ச்சியை தொடர்ந்தால், நீங்கள் வெளியேற்றப்படுவீர்’
என்றெல்லாம் மிரட்டினர் தேவாலயத்தின் நிர்வாகிகள்.

யாரும் கட்டுரையை பற்றி கருத்து எதுவுமே வெளியிடவில்லை.
மிகுந்த துயரத்திலும், தனிமையிலும் தன் கடைசி நாட்களைக்
செலவழித்த க்ரிகர், 1884ல் காலமானார்.

அவர் இறந்து, 16 ஆண்டு களுக்கு பின், பரம்பரை யியலும்,
ஜீன் இயலும் ஏற்பட்டபோது, அதன் எல்லா உண்மைகளும் அவரது
கட்டுரையில் இருப்பதைக் கண்டு, உலகமே அசந்து போய்
வருத்தமடைந்தது.

ம்ஹூம்… இறந்த பிறகு கண்டுபிடித்து என்ன பயன்!

—————————-
சிறுவர் மலர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: