திருமங்கலம் – நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் 14–ந் தேதி முதல் மெட்ரோ ரெயில் ஓடும்

திருமங்கலம் – நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் 14–ந் தேதி முதல் மெட்ரோ ரெயில் ஓடும்

திருமங்கலம் – நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் சேவை 14–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்க இருக்கிறது.
மே 10, 05:15 AM
சென்னை,

தமிழகத்தில் முதலாவது நீண்ட தூர சுரங்க ரெயில் போக்குவரத்து இது என்பதால், சென்னை மக்களுக்கு ‘திகில்’ அனுபவம் காத்து இருக்கிறது.

மெட்ரோ ரெயில் சேவை
சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், 2 வழித்தடங்களில் (வண்ணாரப்பேட்டை – விமான நிலையம், சென்டிரல் – பரங்கிமலை) மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

முதற்கட்டமாக, கோயம்பேடு – பரங்கிமலை, சின்னமலை –
விமான நிலையம் இடையே பணிகள் முடிக்கப்பட்டு, உயர்மட்ட
பாதையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், திருமங்கலம் – நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில்
மெட்ரோ ரெயில் சேவையை தொடங்குவதற்கான பணிகளும்
வேகமாக நடந்து வந்தன. 7.63 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட
இந்தப் பாதையில், திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர்
கிழக்கு, ஷெனாய்நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம்,
நேரு பூங்கா ஆகிய 7 ரெயில் நிலையங்கள் வருகின்றன.

ஆய்வு
இதில், திருமங்கலம் – ஷெனாய்நகர் வரையே இரட்டை ரெயில்
பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஷெனாய் நகர் – நேரு பூங்கா இடையே
ஒற்றை பாதை பணியே முடிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும்,
சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்க
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முடிவு செய்தது.

அதன் ஒரு பகுதியாக, கடந்த மாதம் (ஏப்ரல்) 12, 13 ஆகிய தேதிகளில்
மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன், தனது
குழுவினருடன் குறிப்பிட்ட வழித்தடத்தில் டிராலியில் சென்று ஆய்வு
மேற்கொண்டார். ஆய்வு திருப்திகரமாக அமைந்ததால், மெட்ரோ
ரெயில் போக்குவரத்தை தொடங்க அவர் ‘பச்சைக் கொடி’
காட்டிவிட்டார்.

14–ந் தேதி தொடக்கம்
அதன்படி, 14–ந் தேதி திருமங்கலம் – நேரு பூங்கா இடையே சுரங்கப்
பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்க இருக்கிறது.
அன்று பகல் 12 மணிக்கு திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில்
நடைபெறும் விழாவில், மத்திய மந்திரி வெங்கையா நாயுடு, தமிழக
முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணை மந்திரி
பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ‘பச்சைக் கொடி’ காட்டி
சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்கி
வைக்கின்றனர்.

உடனடியாக, சுரங்கப்பாதை வழித்தடத்தில் செல்லும் மெட்ரோ
ரெயில்களில் பயணிகளும் செல்ல அனுமதிக்கப்பட இருக்கின்றனர்.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் குறைந்த அளவு தூரத்திற்கு
ஏற்கனவே சுரங்கப்பாதை இருந்தாலும், நீண்ட தூரத்திற்கு
(7.63 கிலோ மீட்டர்) சுரங்கப்பாதையில் ரெயில் போக்குவரத்து
தொடங்குவது இதுவே முதல் முறையாகும்.

சென்னை மக்களுக்கு புதிய அனுபவம்
அதுவும் ‘குளுகுளு’ மெட்ரோ ரெயில்களில், அகன்ற கண்ணாடி
வழியாக வெளியே பார்த்துக்கொண்டு, குகைக்குள் செல்லும்
‘திகில்’ அனுபவத்தை சென்னை மக்கள் உணரப்போகிறார்கள்.
சென்னை மக்களுக்கு புதிய அனுபவமாக இது இருக்கும்.

வருகின்ற 14–ந் தேதி திருமங்கலம் – நேரு பூங்கா இடையே
சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்க
உள்ள நிலையில், குறிப்பிட்ட வழித்தடத்தில் உள்ள மெட்ரோ
ரெயில் நிலையங்களை நேற்று தமிழக தொழில்துறை அமைச்சர்
எம்.சி.சம்பத் ஆய்வு செய்தார்.

———————————
தினத்தந்தி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: