சிரிப்பு மன்னன் சார்லி… சாப்ளின் கருவூலம்!



Library filer of Charlie Chaplin, 1934.
——-

டொனால்டு டெக் உடலமைப்பு, பொருந்தாத உடை,
நைந்துபோன காலணி, பழைய தொப்பி, வளைந்த பிரம்புக்
கைத்தடி, கோணல் நடை என்றதும் நம் மனதில் சட்டென
நிற்கும் உருவம் சார்லி சாப்ளின்.

திரைப்படங்கள் பேச ஆரம்பிக்கும் முன்னரே அதில் நடித்த
இவரது நடிப்பு பேசப்பட்டது. நான்கு தலைமுறைகளுக்கு
அறிமுகமாகியிருக்கும் இநதக் கலைஞரின் 128வது பிறந்த
நாள் அண்மையில் மிகப் புதுமையான முறையில்
ஜெனிவாவில் கொண்டாடப்பட்டது.

அந்த விழாவிற்கு வந்த பெண்கள், குழந்தைகள் உள்பட
662 பேர்களும், சார்லி சாப்ளினின் டிரேட் மார்க் உடை ஹிட்லர்
மீசை, கறுப்புக் கோட், தொப்பி, பிரம்பு உடன் வந்திருந்தார்கள்.
இந்த 128து பிறந்த நாள் மட்டும் அப்படி என் விசேஷம்
என்கிறீர்களா? இருக்கிறது.

சுவிட்சர்லாந்தில் ஜெனிவா நகருக்க அருகிலிருக்கும் ஒரு
அழகான ஏரிக்கரையிலிருக்கும் வீட்டில்தான் சார்லி சாப்ளின்
தம் வாழ்க்கையின் கடைசி 25 ஆண்டுகள் வாழ்ந்தார்.

ஏழ்மை நிலையிலிருந்து மிகுந்த கஷ்டங்களுக்கிடையே
கலைஞனாக, படத்தயாரிப்பாளராக, இசை அமைப்பாளராக
வளர்ந்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த
சார்லி சாப்ளினுக்கு அமெரிக்கா சென்று அங்கு வாழ ஆசை.

ஆனால் 1950களில் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில்
நிகழ்ந்து கொண்டிருந்த பனிப் போரினால், கம்னியூஸ்ட்டுகளாக
இருப்பார்களோ எனச் சந்தேகப்படுபவர்களுக்க விசாக்கள்
மறுக்கப்பட்டன.



சார்லி இடதுசாரி சிந்தனை கொண்டவர் எனக் கருதப்பட்டதால்
அவருக்கும் விசா மறுக்கப்பட்டது. அதனால் அமெரிக்காவுக்கு
எக்காலத்திலும் வரமாட்டேன் எனச் சபதம் செய்த சாப்ளின்
ஐரோப்பாவில் சுவிட்ஸர்லாந்தில் 14 ஏக்கர் பரப்பில் அழகான
தோட்டத்துடன்கூடிய அரண்மனையில் வசித்து வந்தார்.

ஒற்றுமையில்லாத சார்லியின் வாரிசுகளிடமிருந்து
(அவருக்கு 11 குழந்தைகள்) நீண்ட நாள் போராட்டத்துக்குப் பின்
பெறப்பட்ட அந்த அரண்மனையைப் பெரும் செலவில் புதுப்பித்து
சார்லி சாப்ளின் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும்
சேகரித்து ஒரு கருவூலமாக உருவாக்கியிருக்கிறார்கள்
சார்லியின் ரசிகர்கள் கொண்ட ஒரு குழு.

அவர் நடித்த முதல் படத்திலிருந்து கடைசி படம் வரை உள்ள
ஸ்டில்கள், சில செட்டுகள், அவர் படித்த புத்தகங்கள்,
சந்திப்புகளின் படங்கள், விருதுகள், அவரைக் கவர்ந்தவர்களின்
தத்ரூப மெழுகுச்சிலைகள் எனப் பல விஷயங்களால்
நிரம்பியிருக்கி்னறன அந்த இல்லம்.

அவரைக் கவர்ந்தவர்களின் உருவகங்களில் சர்ச்சிலுக்கு அருகில்
காந்திஜி.
சார்லி சாப்ளினுக்கு எட்டு நாடுகளில் நிறுவப்பட்டிக்கும்
சிலைகளின் படங்களும் இங்கே காட்சிப் படுத்தப் பட்டிருக்கின்றன.
ஆண்டுக்கு ஐந்து லட்சம் சுற்றுலாப் பயணிகளைக் கவர்கிறது
இந்த இடம்.

கடந்த ஆண்டு திறந்துவைக்கப்பட்ட இதை உருவாக்கப்பிடித்த
காலம் 10 ஆண்டுகள் காட்சிக்காகப் படங்கள் சேர்ப்பது
மட்டுமல்லாமல் சில அரசாங்கங்கள் உள்பட சம்பந்தப்
பட்டவர்களிடம் காட்சி பொருட்களைப் பயன்படுத்திக் கொள்ளும்
உரிமைகளைப் பெற்றிருக்கிறார்கள்.

செட்களை அந்தக் கலைஞர்களைக் கொண்டே உருவாக்கி
இருக்கிறார்கள். உள்ளே இருக்கும் அரங்கத்தில் பிலிம் சுருளை
ஓட விட்டு, பழைய ப்ரொஜக்டரில் சார்லியின் பேசாத படங்களை
ஓட்டிக்காட்டுகிறார்கள்.

இத்தனை ஏற்பாடுகளையும் செய்ய வேண்டியிருந்ததனால்தான்
10 ஆண்டுகள்.

இந்த மியூசியம்தான் அவர்களது முதலாமாண்டு விழாவைக்
கொண்டாட சார்லியின் ரசிகர்களுக்கு அவரைப்போல உடையணிந்து
வாருங்கள் என விடுத்த அழைப்பின் விளைவுதான் 600க்கும்
மேற்பட்ட சாப்ளின்கள்.

அவர்களோடு குழந்தைகளும் குடும்பத்தினரும் சார்லின் சாப்ளினின்
உடையில் வருவார்கள் என்பது நாங்களே எதிர் பார்க்காத ஒன்று
என்கிறார் பிலிப்பி மெய்லன் என்ற கட்டடக் கலைஞர்.

இவர்தான் இந்தக் கருவூலத்தை உருவாக்கிய குழுவின் தலைவர்.
வந்தவர்கள் அனைவரும் ஒரு நட்சத்திர வடிவில் நின்று சார்லிக்குப்
பிடித்த ஒரு பாடலைப் பாடினார்கள். மிக அழகான சூழலில்
ஏரிக்கரையிலிருக்கும் இந்த பூங்காவில் சார்லி சாப்ளினுக்கு
ஒரு சிலையும் இருக்கிறது.

உலகில் சொந்த நாட்டில் சிலை நிறுவப்பட்டிருக்கும் ஒரே காமெடியன்
சார்லி சாப்ளின் எனச் சொல்கிறது அதன் கீழ் உள்ள குறிப்பு.

அவர்களுக்குத் தெரியாதது, நாம் கலைவாணருக்கு சிலை நிறுவி
கௌரவித்திக்கும் விஷயம்.

————————————-
– ரமணன்
கல்கி
படம் – இணையம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: