தலைவருக்கு சென்ட்ரல்ல செல்வாக்கு அதிகமாமே..!
–
ஆமாம்! சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்ல கொஞ்ச
காலம் போர்ட்டரா இருந்தாராம்!
–
வெ,.ராம்குமார்
–
——————————-
–
ஜல்லிக்கட்டை ஆரம்பிச்சு வைக்கப்போன தலைவரை
மாடு முட்டிடுசா, எப்படி?
–
வாடிவாசல் முன்னாடி நின்னு செல்ஃபி எடுத்துக்கிட்டு
இருந்தாராம்!
–
மு.க.இப்ராகிம்
–
———————————-
–
செல்லமா அடிச்சதற்கு உங்க மனைவி கோபித்துக்
கொண்டு அவுங்க அம்மா வீட்டுக்கு போயிட்டாங்களா?
–
செல்லம்மாங்கிறது வீட்டு வேலைக்காரியாச்சே!
–
மு.க.இப்ராகிம்
–
———————————–
–
இன்னொரு ‘தாலி’ அர்ஜெண்டா ரெடி பண்ணுங்க!
–
ஏன்?
–
துணை மாப்பிள்ளையும் துணைப்பெண்ணும்
லவ்’வாம்!
–
ராஜூ சுந்தரம்
–
————————————-
–
ஏம்பா சர்வர்! பேப்பர் ரோஸ்ட்ல ஏதேதோ டிக் பண்ணி
மார்க்கெல்லாம் போட்டிருக்கே?
–
இது ‘பரீட்சை பேப்பர் ரோஸ்ட்’ சார்!
–
யுவகிருஷ்ணா
–
———————————–
குமுதம்
துணை மாப்பிள்ளையும் துணைப்பெண்ணும் லவ்’வாம்!
மே 6, 2017 இல் 7:43 பிப (நகைச்சுவை)
Advertisements
மறுமொழியொன்றை இடுங்கள்