உலகப் பழமொழிகள்-மியான்மர்

 

unnamed (18).jpg

* துறவிகள் மெலிந்தால் அழகு
விலங்குள் கொழுத்தால் அழகு
மனிதர்கள் படித்தால் அழகு
பெண்கள் மணந்தால் அழகு

* உன் ஆண் குழந்தைகளையும், பெண் குழந்தையையும்
நம்பியிருந்தால் உனக்கு இரு கண்களும் இல்லை.

* நாய்களின் பிரார்த்தனைகள் எல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்டால்,
வானம் எலும்பு மழை பொழியும்.

* பள்ளிவாசல் எவ்வளவு பெரியதாகவும் இருக்கட்டும்.
இமாம் அவர்க்குத் தெரிந்ததைத்தான் போதனை செய்வார்.

* பேசுகிறவனைவிடக் கேட்பவனுக்கு அதிகப் புத்தி வேண்டும்.

* மனிதன் கல்லைவிடக் கடினமானவன்.
ரோஜா மலரைவிட மென்மையானவன்.

* தவறான பாதையில் நீ எவ்வளவு தூரம்
சென்றிருந்தாலும் சரி, திரும்பி வா.

* மகிழ்ச்சியைக் காண்பதற்கு ஒருவன் களைக்கும்வரை
நடக்க வேண்டும்.

* மூன்று பொருட்கள் இந்த மண்ணில் விலை மதிப்பற்றதாகக்
கணக்கிடப்படுகின்றன.
அவை – அறிவுடைமை, தானியம், நட்புடைமை.

* ஒரு மரத்தினுடைய நிழலில் தங்குபவன் அதனுடைய
கிளைகளை உடைப்பது சரியல்ல.

—————————————-

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: