இரத்தம் செலுத்தாமல் இதய அறுவை சிகிச்சை


சென்னையைச் சேர்ந்த 75 வயது முதியவருக்கு
இரத்தம் செலுத்தாமல் இதய வால்வு, இதய பை-பாஸ்
அறுவை சிகிச்சைகளைச் செய்து பில்ராத்
மருத்துவமனை டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

இதுபற்றிய விவரம்:

சென்னையைச் சேர்ந்த திருமலாச்சாரி (75) என்பவர்
கடந்த ஒன்றரை ஆண்டாக இதய நோயால் அவதிப்பட்டு
வந்தார். இதயத்தில் சுத்திகரிக்கப்படும் இரத்தத்தை
உடல் முழுவதுக்கும் எடுத்துச் செல்லும் பெரிய ரத்தக்
குழாயில் (மகாதமனி) அடைப்பு, இதய அயோட்டிக்
வால்வில் அடைப்பு பிரச்சினைகள் அவருக்கு இருந்தன.

கிறிஸ்தவ சமூகத்தின் ஒரு பிரிவைச் சேர்ந்த
(“ஜஹோவா விட்னஸ்’) அவர், தனது இரத்தத்தைச் சேமித்து
வைத்தோ அல்லது பிறருடைய இரத்தத்தைச் செலுத்தியோ
இதய அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள விரும்பவில்லை.

இதையடுத்து இரத்தம் செலுத்தாமல் அவரது இதயப்
பிரச்னையைச் சரி செய்வது குறித்து மருத்துவமனை
டாக்டர்கள் ஆய்வு செய்தனர்.

கடந்த டிசம்பர் 19-ம் தேதி அவருக்கு இதய அறுவைச்
சிகிச்சை செய்யப்பட்டது. ஒரு மாதத்துக்கு வாரத்துக்கு
ஒரு முறை இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும்
“எரித்ரோ புரோட்டீன்’ ஊசி திருமலாச்சாரிக்குப்
போடப்பட்டது.

இதன் காரணமாக அவரது இரத்த ஹீமோகுளோபின்
அளவு 12.6 கிராமாக உயர்ந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதயம் துடித்துக் கொண்டிருக்கும்போதே பை-பாஸ்
அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. செயற்கை
இதய – நுரையீரல் இயந்திரத்தின் உதவியுடன்
புதிய வால்வு பொருத்தப்பட்டதாகவும் டாக்டர்கள் கூறினர்.

இரத்த இழப்பு இல்லாமல், இரத்தம் செலுத்தாமல் இரண்டு
அறுவை சிகிச்சைகளும் ஒரே நேரத்தில் நான்கு மணி
நேரத்தில் செய்து முடிக்கப்பட்டன.

அறுவை சிகிச்சை முடிந்த இரண்டு நாளில் திருமலாச்சாரி
நடக்கத் தொடங்கி விட்டார். இதய சிகிச்சை முடிந்து
கடந்த 26-ம் தேதி அவர் வீடு திரும்பி நலமுடன் உள்ளார்.

பில்ராத் மருத்துவமனையின் தலைமை இதய அறுவை
சிகிச்சை நிபுணர் எஸ். தியாகராஜ மூர்த்தி,
இதய மருத்துவ நிபுணர் கே. தாமோதரன், மயக்க மருத்துவ
நிபுணர்கள் நெடுமாறன், மகாதேவன் ஆகியோர்
இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.

———————-
தமிழ் வெப்துனியா

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: