தலைவருக்கு மரம் வளர்ப்புல ஆர்வம் ரொம்ப அதிகம்…!


தலைவருக்கு மரம் வளர்ப்புல ஆர்வம் ரொம்ப அதிகம்…!

அதுக்காக தென்னை மரம், பனை மரத்தில்தான் கொடி
ஏத்துவேன்னு சொல்றதா?

———————————–

என்ன டாக்டர் இது, உங்க செல்போன்ல சும்மா
போட்டோ எடுத்துட்டு எக்ஸ்ரே எடுத்ததா பில்
தர்றீங்க?

இங்க பாருங்க…செல்போன்ல எக்ஸ்ரே எடுக்குற
ஆப்ஸ் வச்சிருக்கேன்..!!


——————————-

என்னங்க இது, ரேங்க் ஹோல்டர்ஸ்ன்னு ரொம்ப
வயசானவங்க போட்டோவா போட்டுருக்காங்க?

அது ஸ்கூலுக்கு டொனேஷன் கொடுத்தவங்க
ரேங்காம்!

——————————

என்னப்பா இது…பாதி உடைஞ்ச பிளேட்ல
பிரியாணியை கொண்டாந்து வைக்கிறே?


நீங்கதானே ஆஃப் பிளேட் பிரியணி கேட்டீங்க!

—————————-

இணைப்பு விழான்னு சொல்லி தொண்டர்கள்
எல்லோரையும் வீட்டுக்கு வரச்சொல்லி தலைவர்
நல்லா ஏமாத்திட்டிரு…!

என்னாச்சு?

அவர் வீட்டுக்கு புதுசா காஸ் இணைப்பு
வந்திருக்கிறதைத்தான் இணைப்பு விழான்னு
கொண்டாடுறாராம்..!

———————————
-குமுதம்

பின்னூட்டமொன்றை இடுக