மாங்கல்ய பலம் தரும் விரதம்

எந்தப் பெண்ணுக்குத்தான் தீர்க்க சுமங்கலியாக
வாழவேண்டும் என்ற ஆசை இருக்காது?

அந்த ஆசை அஸ்வபதி மன்னனின் மகள் சாவித்திரிக்கும்
இருந்தது.

ஆனால், விதியோ அவள் கணவன் சத்யவானுக்கு
ஆயுள் பலம் இல்லை என்றது. அதனால், தர்மதேவன்
பாசக்கயிறை வீசி சத்யவானின் உயிரை எடுத்தான்.

உயிரான கணவனின் உயிரை எடுத்துப்போன
காலதேவனைத் தொடர்ந்தாள், சாவித்திரி. தன் தாலிக்கு
பலம் வேண்டும் எனக் கேட்டாள். யோசிக்காமல் ஆசி
அளித்தார் ஆயுள்தேவன்.

அப்புறம் என்ன, மனைவியின் மஞ்சள் கயிறின் பலத்தால்
மரணக் கயிறில் இருந்து தப்பினான் சத்யவான்.

சாவித்திரியின் மாங்கல்ய பலத்திற்குக் காணம்.
அவள் கடைப்பிடித்த விரதம்.

காமாட்சி அன்னையை வேண்டி அனுசரிக்க வேண்டிய
அந்த விரதத்தின் பெயர் காரடையான் நோன்பு.

——————————–

கன்னியரும், மணமாவனர்களும் இந்த விரதத்தினைக்
கடைப்பிடித்தால், மனம்போல மணப்பேறு கிட்டும்;
மணாளனின் ஆயுள்பலம் கூடும் என்பது புராண வாக்கு.

ஈசன், முக்காலமும் நிலைத்த கடவுளாக இருக்கக்
காரணம், காமாட்சியன்னை இந்த விரதத்தினை
அனுஷ்டிப்பதுதான் என்கிறது சிவ புராணம்.

மாசியும் பங்குனியும் சேர்ந்து வரும் நாளில் காரடையான்
நோன்பினைக் கடைப்பிடிக்க வேண்டும்
அன்றைய தினம் நல்ல நேரத்தில் காமாட்சி அம்மனின்
படத்தை வைத்தோ அல்லது ஒர கலசத்தில்நீர் நிரப்பி
வைத்து அதில் அம்பிகையை எழுந்தருளும்படி வேண்டிக்
கொண்டோ காமாட்சியம்மன் ஆசிரிய விருத்தம் போன்ற
துதிகளைச் சொல்லி தூப தீப ஆராதனைகள் செய்தல்
வேண்டும்.

கலசம் அல்லது படத்தின் மீது நோன்புக் கயிறுகளை
சாத்திவைத்து பூஜை செய்து முடித்த பின் பெண்கள்
கழுத்திலும் ஆண்கள் வலக்கரத்திலும் கட்டிக் கொள்வது
நல்லது.

காரடையான் நோன்பு என்ற பெயர் வரக் காரணம் அன்று
பிரத்யேகமாகச் செய்யப்படும் கார அடை, வெல்ல அடை
நிவேதனம் தான். பச்சரிசி மாவில் அடை செய்து
வெண்ணையுடன் அதனை நிவேதனம் செய்வது சிறப்பு.

அப்படி நிவேதனம் செய்யும்போது, உருகாத வெண்ணெயும்
ஓரடையும் நான் தந்தேன். என் கணவன் எனைவிட்டு
பிரியாத வரம் நீ தா…! என வேண்டிக் கொள்வது பலன்
தரும்.
(இப்படி பூஜித்த அடையை உண்டு, உண்ணா விரதத்தினை
நிறைவு செய்ய வேண்டும்)

அன்றையதினம் பழைய தாலிச் சரடிற்கு பதில் புதிய
மாங்கல்யச் சரடினை மாற்றிக் கொள்வதும் பலரது வழக்கம்.

நிவேதன அடையில் ஓரிரண்டை வைத்திருந்து மறுநாள்
அதனை பசுவுக்குத் தருவது முழுமையான பலன் கிட்டச்
செய்யும்.
நீங்களும் காரடையான் நோன்பு விரதம் இருங்கள்.
அந்தக் காமாட்சியன்னை நீங்கள் தீர்க்கசுமங்கலியா வாழ
வரமளிப்பாள்.

——————————

– காசிவாசி காளிதாஸ் மகரிஷி
குமுதம் பக்தி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: