கண்ணன் என் காதலன்

 

கவியரசர் கண்ணதாசன், பாரதியாரைப் போலவே, கண்ணன் என் காதலன் எனும் அளவுக்கு கிருஷ்ணர் மேல் பக்தியும் அன்பும் கொண்டவர்.
அவரது வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வையும் கண்ணனின் செயலாகவே எண்ணினார். அந்த அற்புதமான நினைவினை ஒரு கவிதையாகவும் இயற்றினார். அதிகப் பேருக்குத் தெரியாத அந்த கவிதை இதோ உங்களுக்காக…
உயர்வான இந்தப் பாடலை பாடிப்பாருங்கள்… அந்த பாண்டவ தூதன் உங்கள் பக்கத்திலேயே நண்பனாக நிற்பதுபோல் உணர்வீர்கள்!

* சத்தியப் பேற்றினில் தழைத்தமெய் யடியவர்
தம்மடி வணங்கும் என் கைகள்;
நித்தியத் தவம்புரி நிமலனின் நேயர்கள்
நிழலையே காணும் என் கண்கள்,
பத்தியச் சுவைப்படப் பாடிய புலவர்தம்
பரம்பரை வணங்குமென் இதயம்;
சித்தியிங் கெனக்கருள் சிந்தனை உன்பதச்
சேவையே கண்ணபி ரானே!

* கட்டிளங் கன்னியர் கைவலைக் குட்படும்
காதலும் கண்டனன் ஓர்நாள்;
பொட்டிளம் பூவையர் பொய்ம்மயக் காழ்த்துமோர்
போதையும் கொண்டனன் ஓர்நாள்;
கெட்டநாள் கெட்டபின் கேலியும் கொண்டபின்
கீழ்மையை உணர்ந்தனன் ஓர்நாள்;
பட்டபின் தேர்ந்தன பகவநின் கீதையை
பாடினன் கண்ணபி ரானே!

* செய்தவை குற்றமோ? செய்பவை குற்றமோ?
தேறுமோர் அறிவிலேன் பேதை;
கொய்த öன் மலர்களைக் குப்பையில் மூடினேன்;
குற்றமென் றறிகிலேன் ஏழை;
கைதவழ் பேரருள் காற்றிடை வீசினேன்;
காரணம் காண்கிலேன் பாவி!
மைதவழ் மேனியாய்! மயக்கினைத் தீர்ப்பதுன்
வார்த்தையே கண்ணபி ரானே!

* நன்றியில் லாமல்யான் நடந்திருந்தேனெனில்
நாயினும் கீழெனப் படுவேன்;
அன்றியான் செய்தவை அறமெனப் படுமெனில்
அரசனுக் கரசனாய் மகிழ்வேன்;
வென்றியான் கொண்டவை மேன்மையான் கண்டவை
வியத்தகும் மியினா லல்லேன்;
அன்றென தன்னையும் தந்தையும் செய்ததோர்
அறத்தினால் கண்ணபி ரானே!

* நீண்டதோர் ஆயுளும் நிறைந்ததோர் செல்வமும்
நீதரக் கேட்டிலேன் தலைவா!
தோண்டுமோர் கைக்கெலாம் சுரப்பதால் உன்னடி
தொழுகிறேன் என்னுயிர் கண்ணா!
ஈண்டு நான் ஆண்டு நீ என் செய்க் கூடுமோ
என்னுயிர்க் கண்ணபி ரானே!

* முட்டையில் என்னைநான் முடினேன் அன்றுனை,
முழுமையாய்க் கண்டிலேன் ஐயா!
பெட்டையாய்ச் சேவலாய்ப் பொய்யா?
கட்டையாய் வாழ்க்கையைக் கழித்தபின் இன்றுனைக்
காண்கிறேன் என்னையே நானே;
அட்டையாய் ஒட்டினேன்; அண்ணலே!
இன்றெனக்கு அருள்புரி கண்ணபி ரானே!

————-

காந்தி கண்ணதாசன், தினமலர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: