* கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) –
யாகசாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்து பூஜிக்கப்பட்ட
குடத்து நீரை அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தல்.
இதனால் அந்த மூர்த்தி அந்த விக்ரகத்தில் எழுந்தருள்கிறார்.
–
* மஹாபிஷேகம் –
கும்பாபிஷேகம் முடிநத பிறகு மூல விக்ரகத்திற்கு முறைப்படி
அபிஷேகம் அலங்காரம் செய்தல்.
–
* மண்டலாபிஷேகம் –
பிறந்த குழந்தையாக பாலரூபியாக விக்ரகத்தில்
எழுந்தருளியிருக்கும் இறைவனை 48 நாட்கள் விசேஷ அபிஷேக
பூஜைகள் செய்து முழுமையான ஆற்றலை அடையச் செய்வது.
–
குண்டங்களின் எண்ணிக்கை:
ஏக குண்டம் – ஒரு குண்டம் அமைத்தல்.
பஞ்சாக்னி – ஐந்து குண்டம் அமைத்தல்.
நவாக்னி – ஒன்பது குண்டம் அமைத்தல்.
உத்தம பட்சம் – 33 குண்டம் அமைத்தல்.
கும்பாபிஷேகத்திற்கு செய்யப்படும் யாகங்களை எத்தனை
தடவை செய்யவேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
2 காலம், 4 காலம், 8 காலம், 12 காலம் வரை செய்யும்
முறை வழக்கத்தில் உள்ளது.
கும்பம்: யோகஜம் என்ற சிவாகமம், கும்பமாகிய குடம்
மாமிசமாகும். குடத்திலுள்ள தண்ணீர் ரத்தமாகும்.
கும்பத்தினுள் போடப்படும் ரத்தினங்கள் சுக்லமாகும்,
கும்பத்தில் உள்ள தர்ப்பபையினால் செய்யப்பட்ட கூர்ச்சம்
நாடியாகும். குடத்தின் மேலே நெருக்கமாகச் சுற்றப்படும்
நூல்களே நரம்புகளாகும்.
கும்பத்தைச் சுற்றி போர்த்திக் கட்டியுள்ள வஸ்திரம் தோல்
ஆகும். குடத்தின் மேல் இருக்கும் தேங்காய் சிரசாகவும்,
முகமாகவும் கூறப்படுகிறது. தேங்காயின் மேலே விரிந்துள்ள
தர்ப்பபையினால் செய்யப்பட்ட லம்ப கூர்ச்சம் சிகை (குடுமி)
ஆகவும், தேங்காய்க்கு அடியில் போடப்படும் மாவிலைகள்
சுவாமியின் ஜடாபாரங்கள், உச்சரிக்கப்படும் மந்திரங்களே
பிராணனாகும் என்று கூறுகிறது.
–
————————–
– பொரு. பாலாஜி கணேஷ், சிதம்பரம்
குமுதம் பக்தி
மறுமொழியொன்றை இடுங்கள்