வாழைத்தண்டு கூட்டு


தேவை:
வாழைத்தண்டு நறுக்கியது – 3 கப்,
பாசிப்பருப்பு – 1 கப்,
பச்சை மிளகாய் – 2,
தக்காளி – 1,
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,
தேங்காய் துருவல், கொத்தமல்லி நறுக்கியது –
தலா அரை கப்,
சீரகம் – 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, உப்பு – தேவைக்கு,
கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு –
தலா அரை டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:

நறுக்கிய வாழைத்தண்டுடன் பாசிப்பருப்பு,
பச்சை மிளகாய், தக்காளி, சிறிது மஞ்சள் தூள்
சேர்த்து மூழ்கும் அளவுக்கு சுமார் 6 கப் தண்ணீர்
ஊற்றி குக்கரில் 3 விசில் வரும்வரை வேகவைக்கவும்.
தேங்காய் துருவல், சீரகம், கறிவேப்பிலை,
கொத்துமல்லியை மிக்சியில் சிறிது தண்ணீர்
சேர்த்து விழுதாக அரைக்கவும்.
வாணலியில் வேகவைத்த பொருட்களையும்,
அரைத்த விழுதையும் ஒன்றாகக் கலந்து, அடுப்பை
சிம்மில் வைத்து தேவையான உப்பு சேர்த்து 5 நிமிடம்
கிளறவும்.
பொருட்களைத் தாளித்து கூட்டில் சேர்த்துப் பரிமாறவும்.

———————–
– பத்மஜா, வேலூர்.
மங்கையர் மலர்
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: