வலது கால், ‘செப்பல்’ மட்டும்…

தேனி மாவட்டம், சின்னமனூரிலுள்ள நடுநிலைப் பள்ளியில்,
1999ல், ஏழாம் வகுப்பு படித்தேன். என் வகுப்பு ஆசிரியை லதா,
பாடத்தை மட்டும் எடுக்காமல், பொது விஷயங்கள்
பலவற்றையும் சொல்லி தருவார். அவர் கூறிய விஷயங்களில் சில…

பொதுவாக நம் நாட்டில், பல தொழிலாளர்கள், சம்பளம் உயர்வு
காரணமாகவோ அல்லது வேலை பளுவின் காரணமாகவோ,
‘ஸ்டிரைக்’ என்ற பெயரில் உண்ணாவிரதம் இருந்து உடலையும்,
நேரத்தையும் வீணாக்கி, வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

ஆனால், ஜப்பான் நாட்டில் உள்ள தொழிலாளர்கள், வேறு விதமான
முறையில், ‘ஸ்டிரைக்’ செய்கின்றனர். அதாவது, வேலை நிறுத்தம்
செய்யாமல், வேலைகளை முழுமை அடையா வண்ணம் தங்கள்
பணிகளை செய்கின்றனர்.

உதாரணமாக –

* செப்பல் நிறுவன ஊழியர்கள் என்றால், ஸ்டிரைக்கின் போது,
வலது கால் காலணிகளை மட்டுமே தயாரிப்பர். இவ்வாறு செய்வதன்
மூலம், நிறுவனத்தால், காலணிகளை விற்பனை செய்ய முடியாது.

பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர்களின் கோரிக்கைகள்
நிறைவேற்றப்பட்டால் மட்டுமே, இடது கால் காலணிகளை தயாரிக்க
துவங்குவர். அதன் பின், விற்பனைக்கு அனுப்புவர். இதனால்,
தொழிலாளர்களின் கோரிக்கைகளும் பூர்த்தியடையும்; தொழில்
அதிபர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

* ‘வெள்ளை காகம்’ ஆப்பிரிக்காவில் உள்ளது. இதை மறக்காமல்
இருக்க, ‘ஆப்பிரிக்க மக்கள் அனைவரும் கருப்பாக இருப்பர் என்பதை,
ஞாபகம் வைத்துக் கொண்டால் போதும். உங்களுக்கு வெள்ளை காகம்
நினைவில் வந்துவிடும்…’ என்பார்.

* நாம் எப்போதும் நல்லதே பேச வேண்டும் என்பதை, என் ஆசிரியை,
‘வானத்தில் ஒரு தேவதை இருக்கு… அது எப்போதும், ‘நடக்கும் நடக்கும்!’
என்று, கூறிக் கொண்டே இருக்கும். நாம் நல்லது பேசினால், நாம் பேசும்
போது, தேவதை நடக்கும் என்று சொல்லும்;
அப்போது நல்லது நடக்கும். நாம் தவறான சொற்கள் பேசும் போது,
தேவதை நடக்கும் என்று சொன்னால், அதுவும் நடத்துவிடும்.
எனவே, எங்கு எப்போது பேசினாலும், நல்லதே பேச வேண்டும்…’

இப்படி எங்கள் ஆசிரியை சொல்லி கொடுத்த அனைத்தும், வைரங்களாய் எ
ன் மனதைவிட்டு நீங்காமல், நினைவில் இருக்கிறது. இப்படிப்பட்ட ஆசிரியை
கிடைக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

——————————————-
– கே.பொன்மணி, செல்லூர்.
சிறுவர் மலர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: