சாமி மாடுகள்

 

“உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்;
வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்,’
என்றான், எட்டயபுரத்து முண்டாசுக் கவிஞன்.

உழைப்பிற்கும், உழவுக்கும் பெயர் போன தமிழகத்தில்,
தை மாதத்திற்கு தரும் மரியாதையே தனி.

“வந்தாரை மட்டுமல்ல, வாழ வைப்போரையும் வழிபடுபவன் தமிழன்,’
என்பதற்கு, தை பொங்கல்தான், சரியான உதாரணம். ஆண்டுதோறும்
நமக்காய் சுழன்று உழைக்கும் மாட்டுக்கு, பொங்கல் வைத்து வழிபடும்
மனிதாபிமானம், வேறு எங்கு உண்டு?

அந்த அளவிற்கு, மண்ணிற்கு அடுத்தபடியாக, மாடுகள் மீது விவசாயிகள்
உயிரை@ய வைத்துள்ளனர். அதே நேரத்தில், “தெய்வம்’ என்று வரும்
போது, தன் உயிரையும் பணையம் வைக்க, விவசாயிகள்
தயங்குவதில்லை. அந்த அளவிற்கு, இயற்கை மீது, தெய்வம் மீது,
அவர்களுக்கு நம்பிக்கை அதிகம்.

அதனால்தான், தங்கள் உயிரினும் மேலான கன்றுகளை, கடவுளுக்கு
தானம் செய்யும் பழக்கம், தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ளது. அங்குள்ள
ஸ்ரீ நந்தகோபாலன் கோயிலுக்கு, நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத்
தொழு என்ற, மற்றொரு பெயர் உண்டு.

கோயிலுக்கு பெயர் இருந்தாலும், சுவாமி சிலை இல்லை. ஆச்சரியமாக
இருக்கிறதா? அங்குள்ள மாடுகள் தான், சுவாமிகள்; அவற்றைத்தான்
பக்தர்கள் வணங்குகின்றனர்.

200 ஆண்டுகளுக்கு முன், கர்நாடகாவில்இருந்து இங்கு வந்த ஒரு பிரிவினர்,
இக்கோயில் வழிபாட்டை, வழக்கப்படுத்தினர். அவர்கள் வீட்டில்,
தை முதல் நாளில் ஈன்றெடுக்கும் கன்றுகளை, கோயிலு<க்கு தானம்
செய்வது வழக்கம். ஒரு பிரிவினர் மட்டுமே தொடர்ந்த இப்பழக்கத்தை,
நாளடைவில் அனைவரும் பின்பற்றத் தொடங்கினர். அந்தக் கன்றுகள்,
மாடுகளாய் மாறும் போது தெய்வமாய் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

தானம் செய்யும் கன்றுகள், தெய்வமாய் அவதாரம் எடுப்பதால், அதை
அளிப்பவரின் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. மாட்டுப் பொங்கல்,
இங்கு கோலாகலமாய் நடக்கும். அன்று, பட்டத்துமாடு அலங்கரிக்க பட்டு,
பொங்கல் விழா கொண்டாடப்படும்.

“பட்டத்துமாடு’ எங்கிருந்து வரும் என்கிறீர்களா? கோயிலில் விடப்படும்
கன்றுகளில் இருந்து தான், பட்டத்துமாடு தேர்வு நடக்கிறது. “தை’ முதல்
நாளில், எத்தனை கன்றுகள் பிறந்து விடப்போகிறது?, என்ற சந்தேகம்,
உங்களுக்கு எழலாம்.

அதற்கும் பதில் இருக்கிறது இங்கு; கோயிலில் உள்ள 200க்கும் மேற்பட்ட
மாடுகள் தான், அந்த கேள்விக்குரிய பதில். இங்குள்ள மக்களுக்கு தெய்வம்
மீது எவ்வளவு பக்தி இருக்கிறதோ, அதே அளவு, பக்தர்களின் நம்பிக்கை மீது,
தெய்வத்திற்கும் கனிவு இருக்கிறது.

அதனால்தான், தை முதல் நாளில், இங்குள்ள பெரும்பாலான பசுக்கள்,
கன்று ஈன்று வருகின்றன.
மாடுகளுக்கு பொங்கல் வைத்து பெருமை சேர்க்கும் நம் வழக்கத்திலிருந்து
ஒரு படி மேலே போய், மாடுகளையே தெய்வமாக்கி வழிபட்டு வரும்
மக்களின் நம்பிக்கையை பாராட்டுவோம்.

———————————-
-கம்பன்
பொங்கல் மலர், தினமலர் 2013

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: