புத்தாண்டும் சில நம்பிக்கைகளும்!

ஆடல் -பாடல்!

நல்ல திறந்தவெளி – பசுமையான திறந்தவெளி. அப்படிப்பட்ட
திறந்தவெளியில் புத்தாண்டு தினத்தன்று மரத்தை சுற்றி நடனம்
ஆடினால், உடல் நலம், அன்பு ஆகியவை அடுத்த, 12 மாதங்களுக்கு
சிறப்பாக இருக்கும்.

ஜன்னல் கல்யாணம்!


மக்களின் முக்கியமான விஷயங்களில் ஒன்று கல்யாணம்.
மணமாகாத பெண்கள் காலை எழுந்தவுடன், ஜன்னல் வழியாக
முதலில் ஒரு ஆணை பார்த்தால், அந்த ஆண்டுக்குள் திருமணம்
நடந்து விடும்.

காசு… தங்கக்காசு!


காசை வெளியே வைத்தாலே காணாமல் போய்விடும்.
அதிலும் தங்க காசை வைத்தால் சொல்லவும் வேண்டுமா…
அதையே புத்தாண்டு நம்பிக்கைக்கு பயன்படுத்தி கொண்டனர்.
தங்க காசை வீட்டிற்கு வெளியே புத்தாண்டு தின இரவில் முழுக்க
வைத்துவிட்டு, மறுநாள் பார்க்கும்போது, காசு இருந்தால்
அந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சி தான்.

கதவை சாத்தாதே!


காசு போன்றே இதுவும் சாத்தியமில்லாதது.
அதாவது, புத்தாண்டின் நள்ளிரவின்போது, வீட்டின் கதவுகள்,
‘பப்பரப்பான்’னு திறந்து வைக்கப்படும். இதன்மூலம் பழைய
ஆண்டு நிகழ்ந்த கெட்ட நிகழ்வுகளை முற்றிலும் நீங்குவதற்காக
திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

கண்ணை சாப்பிட்டால்…!


அமெரிக்க மக்கள், குறிப்பிட்ட பட்டாணியை சாப்பிடுவதை
அதிர்ஷ்டமாக கருதுகின்றனர். அமெரிக்க மக்கள் கருப்பு கண்
உடைய பட்டாணியை சாப்பிடுவது, பொதுவாக பண
அதிர்ஷ்டத்தை தரும் என்று நம்புகின்றனர்.


பொதுவானது!



புத்தாண்டு எப்படி பொதுவானதோ, அதேபோல் சில நம்பிக்கைகள்
உலகில் பொதுவாக காணலாம்.

புத்தாண்டு அன்று புதிய ஆடையை அணிவது; பரிசுகள் பெறுவது;
முழுவதும் சந்தோஷமாய் இருப்பது; பெற்றோர், பெரியோரிடம்
ஆசி பெறுவது; கோவிலுக்கு போவது; கோபப்படாமல் இருப்பது;
அதிகாலை சீக்கிரம் எழுந்து, சோம்பலாய் இல்லாமல்,
சுறுசுறுப்பாய் இருப்பது.

இந்த புத்தாண்டில் நம்மால் நம்மை முன்னேற்றி கொள்ள முடிய
வேண்டும். அதற்கு நாம் முயல வேண்டும். அவ்வளவே!
பின், வெற்றி புத்தாண்டு நிச்சயமே!

விஷ் யு ஹேப்பி நியூ இயர்!
—————————————-
சிறுவர் மலர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: